உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்

வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: 'பொது இடத்தில் எச்சில் துப்பினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்றார். மாநகராட்சியான வாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகளை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அமல்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் சந்திப் ஸ்ரீவத்சவா கூறியதாவது: புதிய விதிகளின்படி தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெரு நாய்களுக்கு உணவு வைத்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 24 மணி நேரத்துக்கும் அதிகமாக குப்பையை வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது பூங்கா, சாலைகள், சாலை தடுப்புகளில் குப்பையை வீசினாலோ, 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். வளர்ப்பு நாய்களை, 'வாக்கிங்' அழைத்துச் செல்லும்போது, அது பொது இடத்தில் மலம் கழித்தால் அதை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத நாய் உரிமையாளருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கட்டட இடிபாடுகள் அல்லது குப்பையை லாரிகளில் மூடாமல் எடுத்துச் சென்றாலோ அல்லது மாநகராட்சி வாகனங்கள், குப்பை தொட்டிகளை சேதப்படுத்தினாலோ, 2,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க அனுமதித்தல், சுகாாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்செயலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Venkatachalam, Chennai-87
அக் 31, 2025 08:58

டமில் நாட்டில் அந்த மாதிரி அபராதம் போடணும். கவர்மெண்ட் பில்டிங் மாடிப்படியில் ஏறிப் பார்த்தால் தெரியும். சுவற்றில் மூலையில் சிவப்பு பெயிண்ட் அடிச்சு வச்ச மாதிரி இருக்கும். அது சரி துப்புறவன்களை எப்புடி கண்காணிக்குறது?


Balasubramanian
அக் 31, 2025 08:54

அதே நடை முறையை ராமேஸ்வரத்திலும் மதுரை கன்யாகுமரி போன்ற ஊர்களிலும் அமலுக்கு கொண்டு வந்தால் பக்தர்கள் அநேகர் கூடும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும்


சிங்ஜி
அக் 31, 2025 06:39

ஆனாலும் குட்கா, ஜர்தா விற்பதை தடை செய்ய மாட்டாங்க. ஜி.எஸ்.டி யே கோடிக்கணக்கில் வசூலாகுதாம்.


அப்பாவி
அக் 31, 2025 06:38

அதுவும்.பான் பராக், குட்கா போட்டு துப்பினால் 1000 ரூவா அபராதம் போடுங்க...


Kasimani Baskaran
அக் 31, 2025 04:08

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது இந்தியாவில் சர்வசாதாரணம். நாலு சாத்து சாத்தலாம் என்று தோன்றும்...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 01:51

தெருவிலே துப்புனா பொது இடம், வீட்டுச்சுவர், வாசப்படி, கார் மேலே என்று தனியார் இடத்தில் துப்பிவானுங்க வடக்கன் பீடாவாயன்கள். இவனுங்களாலே துப்பாம இருக்கமுடியாது,


vivek
அக் 31, 2025 06:49

விடுங்க பாஸ்....நமக்கு வீடே டாஸ்மாக் லா தான் இருக்கு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை