உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்று ராகுலின் வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பற்றி குறை கூறும் வகையில் பேசினார்.'தேர்தல் ஆணையம் மாலை 5:30 மணிக்கு வாக்களித்தோர் எண்ணிக்கையை எங்களுக்கு வழங்கியது, மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது உடல் ரீதியாக சாத்தியமற்றது. ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் மூன்று நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கிட்டால், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் இருந்தனர், ஆனால் இது நடக்கவில்லை' என்று அவர் கூறியிருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையம் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு கண்டனத்திற்குரியது. தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் ஆகும்.அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களின் முயற்சிகளைப் புண்படுத்துவதாகும்.இதுபோன்ற கூற்றுக்கள் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது. தேர்தல்களின் போது சோர்வில்லாமல் மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை கொச்சைப்படுத்த கூடாது.தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டதாகக் கூறி அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது.இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஏப் 23, 2025 07:48

பப்பு மற்றும் அவரது சகோதரி உட்பட 100 பேர் MP தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள். மக்கள் உங்களை நம்பவில்லை. உங்களை தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள். அந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் இவரது MP பத‌வியை பறிப்பது மட்டுமல்லாமல் கான் கிராஸ் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 23, 2025 04:08

வழக்குப்பதிவு செய்து உள்ளே தூக்கி வைக்க வேண்டியதுதானே... தீவிரவாதிகளை வெளியே உலவ அனுமதிக்கக்கூடாது.


சிட்டுக்குருவி
ஏப் 23, 2025 02:35

உள்நாட்டில் உள்ளவர்களுக்கு உண்மைதெரியும்.அயல்நாட்டில் உள்ளவரிடதில் எண்ணப்பொய்வெண்டுமானாலும் பேசலாம்.நிறைய பொய் பேசவெண்டிருப்பதால் அடிக்கடி வெளிநாடு சென்று பேசிதீர்துகொள்கிரார்.இப்போது தெரிகிறதா அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் ரகசியம்.பொய் பேசுபவர்களுக்கு பொய்களை அடக்கிவைக்கமுடியாது.


K.Ramakrishnan
ஏப் 22, 2025 23:27

தேர்தல் ஆணையம் எப்படி நியாயமாக நடக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். ஒற்றை ஓட்டு கட்சி எப்படியும் 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வதிலேயே சூட்சுமம் புரிகிறது.


பேசும் தமிழன்
ஏப் 23, 2025 07:51

அப்போ விடியல் தலைவர் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா. நீங்கள் சொல்வது போல் தான் வெற்றி பெற்றாரா. நாங்களும் மக்கள் ஓட்டு போட்டு தான் 40 தொகுதியில் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு இருக்கிறோம் !!!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2025 23:03

அப்ப புரியல .... இப்ப புரியுது .....


Rajakumar
ஏப் 22, 2025 22:50

இந்த ராகுல் வெளிநாட்டிற்க்கு சென்று இந்தியாவை தரக்குறைவாக பேசுவார். எனக்கு புரியவில்லை இவர் இந்தியர் தானா


M S RAGHUNATHAN
ஏப் 22, 2025 21:41

இவனை முன்னம் ஒருமுறை இதே பாஸ்டன் நகரில் ஏர்போர்ட் போலீஸ் கைது செய்தது. அப்போது பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு காப்பாற்றி பத்திரமாக நாடு கொண்டு வந்து சேர்த்தார். அவர் செய்த பெரும் தவறு அது.


Yes your honor
ஏப் 22, 2025 21:29

இந்த ராகுலின் உடலில் இந்திய ரத்தம் ஓடவில்லையே, அதனால் தான் இவ்வாறு இந்தியாவின் மதிப்பை வெளிநாட்டில் கெடுக்கிறார். இதுவும் நாட்டிற்கு எதிரான ஒருவகையான தீவிரவாதமே. பாட்டி இந்திரா , தாய் சோனியா ரத்தத்திலும் இந்தியா இல்லை. பிறகு இவருக்கு மட்டும் இந்தியாமீது என்ன பற்று இருக்கும். இந்தியாவிற்கு எதிரான இந்த காங்கிரஸ் கூட்டத்தை மொத்தமாக ஒதுக்குவது ஒன்றுதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு.


thehindu
ஏப் 22, 2025 21:24

ராகுலுக்கு ம்தான் இது பொருந்துமா?. மோடியும் சாவும் எப்போதாவது உண்மை பேசியதுண்டா .


sankaranarayanan
ஏப் 22, 2025 21:15

அயல்நாடு சென்று நமது நாட்டுப்பற்றி ஒரு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் இழிவாக பேசியதை எப்படி அய்யா இந்த உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறது. ஏன் மக்கள்தான் இதற்கு வழக்கு தொடர வேண்டுமா,உச்ச நீதிமன்றம் இந்நாட்டு மக்களுக்காகவே தானே உள்ளது. நாட்டை அவமதிக்கும் யாராக இருந்தாலும் முதலில் சிறைக்குள் தள்ள வேண்டும் பதவியை பறிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை