உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

புதுடில்லி : இலங்கை கடல் எல்லையில், தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும்படி, அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று வலியுறுத்தினார்.இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே, மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று முன்தினம் மாலை புதுடில்லி வந்து சேர்ந்தார். அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.

ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அனுரா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா - இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம். கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, 'சைபர்' பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்பெறும்.இலங்கைக்கு 45,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவும், எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பிராந்திய பல்கலை மாணவர்கள் 200 பேருக்கு, அடுத்த ஆண்டு முதல் மாதாந்திர கல்வி உதவித்தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த 1,500 குடிமை பணியாளர் களுக்கு, இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அரசுத் துறைகளை 'டிஜிட்டல்' மயமாக்கியதில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளதை, அதிபர் திசநாயகே குறிப்பிட்டு பாராட்டினார். அதே போல, இலங்கையிலும் அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்க இந்தியாவின் உதவியை அவர் கோரியுள்ளார்.இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்து தலைவர்கள் விவாதித்த நிலையில், அந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினரின் நலன்களையும், விருப்பங்களையும் அரசு பூர்த்தி செய்யும் என நம்புவதாக மோடி தெரிவித்தார்.இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இலங்கையின் நீர்நிலைகள் உட்பட எந்த பகுதியையும் பிற நாடுகள் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுருக்குமடி வலை

இந்த சந்திப்பின் போது, இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடியிடம், அதிபர் திசநாயகே கவலை தெரிவித்தார்.இந்த போக்கு, கடல் சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், கடல் வாழ் உயிரினங்கள் நாளடைவில் அழிந்துவிடும் அபாயம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.இந்த விவகாரத்துக்கு, இரு நாடுகளும் சேர்ந்து நீடித்த மற்றும் நிலையான தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மோடியிடம் வலியுறுத்தினார்.

கப்பல் சேவை

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் தலைமன்னார் வரை விரைவில் படகு போக்குவரத்து துவங்க உள்ளதாக பிரதமர் அறிவித்தார்.கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடல் பகுதியிலும், துறைமுகங்களிலும் ஆய்வு என்ற பெயரில் சீனாவின் உளவு கப்பல்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு, இலங்கையிடம் மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, இலங்கையின் எந்த பகுதியையும் பிற நாடுகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்றைய சந்திப்பின் போது, இலங்கை வரும்படி பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அதிபர் அழைப்பு விடுத்தார்.இதற்கிடையில், மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் பேச்சு நடத்தியதை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சுருக்குமடி வலை என்றால் என்ன?

சுருக்கு பை போன்ற வட்ட வடிவில் இருப்பதால் இது சுருக்குமடி வலை என்று அழைக்கப்படுகிறது. இது கடலின் அடியில், 500 அடி ஆழம் வரை செல்லும். இது, சிறிய வகை மீன் குஞ்சுகள், முட்டைகள் முதல், பெரிய மீன்கள் வரை வாரி சுருட்டிவிடும் என்பதால், மீன்வளம் குறையும் அபாயம் உள்ளது.பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, சுருக்குமடி வலை பயன்படுத்த தமிழக அரசு, 2007ல் தடை விதித்தது. இந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் 2018ல் உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Jay
டிச 17, 2024 22:47

சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தமிழக மீனவர்கள் தவிர்க்கலாம். மீன் குஞ்சுகள் அனைத்தையும் வாரி எடுப்பதால் கடல் வளம் பாதிக்கப்படும். இதை சொன்னால் மத்திய அரசு எதிராக இங்கு டுமிலன்கள் போராட்டம் நடத்துவார்கள்.


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:19

வழக்கம் போல கடன்வாங்கிவிட்டு ஏப்பம் விட்டு சொல்லுவான் சிங்களன்


kannan
டிச 17, 2024 17:04

GST தெரியாதவர்கள்.... GST பத்தி பேசலாம்


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 16:25

மீன் உண்ணாதவர்கள் எல்லாம் பேசலாமா? செம காமெடி


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 16:24

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுபதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்த்தவர் டாக்டர் கலைஞர். ஆனால் கச்சத் தீவு கைமாறிய போது அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 300 மீட்டர் அகலம், ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் உள்ள தீவு எப்படி அரசியல் பொருளாக இத்தனை வருஷம் இருக்கிறது? இந்த தாத்தா க்களின் அரசியலே தனி. எங்கள் தலைமுறை க்கு விசித்திரமாக இருக்கிறது.


gemoni
டிச 17, 2024 17:06

வைங்குந்தரின் அடுத்த புருடா.


sankaranarayanan
டிச 17, 2024 13:04

கைச்ச தீவை தாரை வார்த்து கொடுத்தபின் இப்போது மன்றாடி என்ன பயன் அப்போது அதற்கு உறு துணை சென்றவர்களை தேசத்துரோகம் செய்ய வேண்டும் அதைப்பற்றியே அவர்கள் பேசமாட்டார்கள்


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 16:04

வெறும் 300 மீட்டர் அகலம் ஒன்றரை கி. மீ நீளம் உள்ள கச்சத்தீவில் என்ன இருக்கு? ஏன் இதை வைத்து அரசியல்? அறிவுகெட்ட தனம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 11:25

தமிழக மீனவர்களின் பேராசை காரணமாக விசைப்படகுகளில் எல்லை தாண்டிச் சென்று இலங்கைக் கடற்படையிடம் சிக்குகிறார்கள் என்று முக சொன்னது சரிதானே ????


Anvar
டிச 17, 2024 09:20

இருக்கற உண்மையை உள்ள எதுக்கு தில் வேணும் .. திராவிட மாடல் லில் தான் தில் அதிகம் பொய் மூட்டைகளை சிரிச்சுகிட்டே சொல்ல .. 4000 கோடி ன்ன ஆச்சு நீட் ரகசியம் கல்வி கடன் நகை கடன் அனைவருக்கும் 1000 மது ஒழிப்பு சாராய ஆலைய முதலாளியை கூப்பிட்டு மது ஒழிப்பு மாநாடு


அப்பாவி
டிச 17, 2024 08:26

எவன் ஒருத்தன் தன் தோள் மேலே நம்ம கை போட அனுமதிக்குறானோ, அவனுக்கு நமது உதவி ரொம்பத்தேவை. இது மனோதத்துவம்.


veera
டிச 17, 2024 09:10

எங்களுக்கும் ஆசைதான்....


nagnak
டிச 17, 2024 08:19

இரட்டை மடி வலை பற்றியும் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றியும் விரிவாக அரசுக்கு பரிந்துரைத்து கட்டுரை வெளியிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை