உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கை அதிபர் இன்று வருகை: மீனவர் பிரச்னைக்கு ஆலோசனை

இலங்கை அதிபர் இன்று வருகை: மீனவர் பிரச்னைக்கு ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயகே, முதல் முறையாக நம் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது, மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே மிகப்பெரும் வெற்றியைப் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அதிபராக பதவியேற்ற பின், முதல் முறையாக நம் நாட்டுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று வருகிறார்.இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்கிறார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை. பாதுகாப்பு, கடல்வழி வர்த்தகம் என, பல வகைகளில், இலங்கை நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீனாவின் உளவு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள், இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்படுவது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.கடந்த அக்டோபரில் தன்னை சந்தித்த நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் தங்களுடைய நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என, அனுரா குமார திசநாயகே உறுதி அளித்திருந்தார்.இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, நம் நாடு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. இலங்கையின் பொருளாதார சீரமைப்புக்கும் உதவி வருகிறது.இலங்கை அதிபரின் இந்த பயணத்தின்போது இந்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கைவாழ் தமிழர்களுக்கான உரிமை தொடர்பாகவும் பேசப்படும்.நம் நாட்டு மீனவர்கள், குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடிப்பதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இந்த கைது நடவடிக்கைகள் தற்போது மிகவும் அதிகமாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை அதிபருடன் விரிவாக பேசப்பட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 141 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டு காவலில் உள்ளனர். இவர்களில், 45 பேர், விசாரணை கைதிகள். 96 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான, 198 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிறையில் 141 மீனவர்கள்

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
டிச 15, 2024 17:04

பேசாம மீன் பிடிப்பதற்காக ஒரு பெரிய எமவுன்ண்டை வருஷாந்திர ஏலத்தொகையா வாங்கிருங்க. 10000 கோடி ஓக்கேவா?


Oviya Vijay
டிச 15, 2024 14:21

இங்கே பகுத்தறிவு அற்றவர்கள் யாரெனக் கேட்டால் சிறு குழந்தை கூட உடனே சொல்லும் அவர்களுக்கு பெயர் சங்கிகள் என்று... என்னுடைய பதிவில் நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பதவியிலிருக்கும் மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் என்ன செய்கிறதென்று... சங்கி என்னும் மடையர்கள் வழக்கம் போல் பாஜக அரசுக்கு முட்டு கொடுப்பதாக நினைத்து என்னை முரசொலி கும்பல் என்று கதற ஆரம்பித்து விட்டது. முரசொலி என்னும் பத்திரிகையை ஒருமுறை கூட தொட்டிராத என்னை அசிங்கப் படுத்துவதாக நினைத்து தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளது சசிகுமார் என்னும் சங்கி... ஒன்று சுய அறிவு இருக்க வேண்டும். இல்லையேல் மற்றவர் சொல்லியாவது திருந்த வேண்டும். இல்லையேல் இவ்வாறு மடயர்களாகவே வாழ்நாள் முழுக்க நீங்கள் இருக்க வேண்டியது தான்...


Oviya Vijay
டிச 15, 2024 10:55

கவலை வேண்டாம் அதிபர் அவர்களே... நீங்கள் இந்தியா வரும்பொழுது சிவப்புக் கம்பளம் விரித்து நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்... ஏனென்றால் எங்கள் மத்திய அரசின் எண்ணத்தின் படி நீங்கள் தான் இந்தியாவிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தமிழ்நாட்டு மீனவர்களை துன்பறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே... அந்த ஆனந்தத்தில் எங்கள் மத்திய அரசால் உங்களுக்கு ராஜ உபசாரம் கண்டிப்பாக தரப்படும்... எம் தமிழக மீனவர்களும் இந்தியா சார்ந்தவர்கள் என்ற எண்ணமே துளியும் இல்லாத ஒரு கையாலாகாத திறனற்ற மத்திய அரசைத் தானே நாங்கள் இங்கே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளோம்... ச்சும்மா கண்துடைப்புக்கு வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது போல இங்கே பாசாங்கு காட்டுவார்கள். கண்டு கொள்ள வேண்டாம்... கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே இந்தியாவிடமிருந்து உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்... நீங்கள் வழக்கம் போல் உங்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் எங்கள் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தாராளமாக தொடரலாம். உங்களை எதிர் கேள்வி கேட்குமளவிற்கு இங்கே எங்கள் மத்திய அரசாங்கத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை... உங்கள் நாட்டிற்கு தேவையான நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலான பொருளுதவி, புத்தம் புதிய ரயில் பெட்டிகள், UPI பண பரிவர்த்தனையை உங்கள் நாட்டில் செயல்படுத்த வழிகாட்டு உதவிகள் இன்னும் பல பல உதவிகள் உங்களை வந்தடையும்... பொருளாதாரத்தில் நிலைகுலைந்த உங்கள் நாட்டை எமது வழிக்கு கொண்டு வந்து எங்களது நெடுநாளைய மீனவர் பிரச்சனையை தீர்க்க வழி இருந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் எங்கள் மத்திய அரசு இருக்கும் வரை நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் அதிபர் அவர்களே...


N Sasikumar Yadhav
டிச 15, 2024 13:08

உங்க மானங்கெட்ட திராவிட முரசொலியோடு நிறுத்திக்கங்க. ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸும் விஞ்ஞானரீதியான ஊழல்வாத கட்சியான தி.மு.கவும் செய்த களவானிதனத்தால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்த பின்தான் இவ்வளவும் நடக்கிறதென உங்க முரசொலி மூளைக்கு புரியவைய்யுங்க


Kumar Kumzi
டிச 16, 2024 16:44

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட கஞ்சா கடத்துறவன் எல்லாம் மீனவனா


கிஜன்
டிச 15, 2024 06:32

நடை உடை பாவனைகளில் ....தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போல இருக்கிறார் .....


முக்கிய வீடியோ