உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு: மீனவர் நலன் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு: மீனவர் நலன் குறித்து ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இதனைத் தொடர்ந்து அவர் 1991 - 94 வரை டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் ஹிந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்கள் முன்னேற்றம், புதுமையான கண்டுபிடிப்புகள், மீனவர் நலன் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. நெருங்கிய அண்டை நாடுகளாக நமது இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அந்தப்பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

குமார்
அக் 17, 2025 18:46

நல்லதே நடக்கும்


Ramesh Sargam
அக் 17, 2025 18:24

கச்சத்தீவு பற்றி பேசினாரா பிரதமர்?


C.SRIRAM
அக் 17, 2025 18:52

இதெல்லாம் கொடுத்தபின் திரும்ப பெறுவது மிக கடினம் . மிக நீண்ட கால குத்தகைக்கு வேண்டுமானால் முயற்சிக்கலாம். இதை கொடுத்தவர்கள் சரி செய்ய இயலாத வரலாற்று பிழையை செய்திருக்கிறார்கள்.


murugan
அக் 17, 2025 19:08

ஓங்கோலர் போயி பேசவேண்டும். தகப்பனார் கொடுத்ததை மகன்தான் கேட்க வேண்டும்.


முருகன்
அக் 17, 2025 19:57

மகன் என்ன இந்தியா பிரதமரா? கேட்பதற்கு...


vivek
அக் 17, 2025 20:47

மகனின் தந்தை தானே தாரை வார்த்தது.....அறிவிலி


vivek
அக் 17, 2025 20:48

மகன் அவளோ ஒர்த் இல்லை முருகா


தத்வமசி
அக் 17, 2025 21:38

ஒட்டு போட்டு ஐந்து வருடம் திராவிட ஆட்சிக்கு தமிழகத்தை மக்கள் கொடுத்தார்களோ அது போல வாழ்நாள் முழுவதுமாக கச்சத்தீவை காங்கிரசும் திமுகவும் சேர்ந்து இலங்கைக்கு எழுதிக் கொடுத்தாயிற்று. அதை மீட்கவேண்டும் என்றால் அதையும் மீட்கத் தயங்க மாட்டார் மோடி. அதனால் அள்ளக்கைகளும் இருநூறு ருபாய் உபிக்களும் அப்பா எப்போது வெளியே வருகிறார், சூட்டிங்கில் பங்கேற்கலாம் என்று அமைதியாக இருக்கவும்.


NALAM VIRUMBI
அக் 17, 2025 18:15

எப்படியோ இலங்கைக்கு நல்ல புத்தி வந்தா சரி. நம்முடன் சேர்ந்து இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு. சீனாவுடன் சேர்ந்தால் கடன்காரன் ஆகி விடும். இதை அவர்கள் உணர வேண்டும்.


RAMESH KUMAR R V
அக் 17, 2025 18:09

நல்லது நடக்கட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை