புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ ராம நவமி விழா; ஸ்ரீராம சீதா திருக்கல்யாணம் கண்டு பக்தர்கள் பரவசம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புட்டபர்த்தி; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி - சீதா தேவி திருக்கல்யாணம் நடந்தது. லட்சுமணர், பக்த ஹனுமன் உடன் காட்சியளித்த ஸ்ரீராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பல யுகங்களுக்கு முன்பு, இறைவன் ஸ்ரீ ராமச்சந்திரனின் அவதாரம் எடுத்து, ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து, அன்னை சீதாவை திருமண செய்தார். அவர் அவதரித்த இந்த புனித நாளில் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இன்று பிரசாந்தி நிலையத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 0800 மணிக்கு விழா தொடங்கியது, தெய்வீக தம்பதியினர், சகோதரர் லட்சுமணன் மற்றும் பக்த ஹனுமான் ஆகியோர் கருவறைக்கு முன்னால் ஒரு மேடையில் எழுந்தருளினர்.