| ADDED : ஆக 03, 2024 11:20 PM
புதுடில்லி
: எல்லை பாதுகாப்பு படை இயக்குனர்கள் நேற்று பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டதையடுத்து தல்ஜித்சிங் சவுத்ரி எல்லை பாதுகாப்புபடை
இயக்குனர் ஜெனரலாக கூடுதல் பொறுப்பேற்றார்.பி.எஸ்.எப்.,
எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் நிதின்
அகர்வால், சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியா
ஆகியோரை, பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. ஊடுருவல் அதிகரிப்பு, முறையான ஒருங்கிணைப்பு
இல்லாதது தான், இந்த அதிரடி மாற்றத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து
எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஸ்தரா சீமா பால் படைப்பிரிவின் இயக்குனர்
ஜெனரலாக உள்ள தல்ஜித்சிங் சவுத்ரி கூடுதல் பொறுப்பேற்றார்.
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடராவார்.
பாதுகாப்புபடையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.