உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு திட்டத்தை முடக்கும் மாநில அரசுகள்; பிரதமர் வேதனை!

மத்திய அரசு திட்டத்தை முடக்கும் மாநில அரசுகள்; பிரதமர் வேதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: :'மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, அரசியல் லாபத்தை மட்டுமே எண்ணி, டில்லி, மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்துள்ளன. இதனால், இத்திட்டத்தின் உண்மையான பயன்களை இந்த இரண்டு மாநில மக்களும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்,'என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் இன்று (அக். 29) தொடங்கி வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=47ul3sxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுகாதார திட்ட துவக்க விழாவில் அவர் பேசியதாவது:நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஆயஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டமாக,செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.இந்த திட்டத்தை பயன்களை, டில்லி மக்களும், மேற்கு வங்க மக்களும் அனுபவிக்க முடியாத வகையில் இரு மாநில அரசுகளும் முடக்கி விட்டன. அந்த மாநில மக்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்ற கவலையும், வேதனையும் என் மனதில் ஏற்பட்டுள்ளது. உதவ முடியாத நிலைக்காக நான் அந்த மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kasimani Baskaran
அக் 30, 2024 05:43

என்ன இருந்தாலும் தீம்க்கா போல ஸ்டிக்கர் ஒட்ட பலருக்கு தெரியவில்லை என்பது ஒரு ஆறுதல்.


J.V. Iyer
அக் 30, 2024 04:28

மத்திய அரசு கொடுக்கும் நிதியை தவறாகப் பயன்படுத்தும் ஒன்றீய மாநில அரசுகளுக்கு நிதி வழங்கக்கூடாது.


Priyan Vadanad
அக் 30, 2024 00:54

அட கர்மமே மாநிலங்களின் ஆலோசனையை பெற்று எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய முறையில் திட்டங்களை தீட்டி தொலையலாமே எல்லாவற்றையும் தான்தோன்றித்தனமாக செய்ய வேண்டியது அப்புறம் புலம்புவதுபோல நடிக்கவேண்டியது.


xyzabc
அக் 30, 2024 00:49

தி மு க போன்ற கட்சி குழி பறிப்புவார்கள்


தாமரை மலர்கிறது
அக் 29, 2024 23:26

மத்திய அரசின் பேச்சை கேட்காத தமிழகம் உட்பட மாநில அரசை கலைப்பது நல்லது.


sundaran manogaran
அக் 29, 2024 23:08

தமிழ்நாட்டிலும் மத்திய அரசு திட்டங்கள் சரியாக செயல் படுத்தப்படுவதில்லை.,.. பெயரளவில் செயல் படுவதை காணலாம்


venugopal s
அக் 29, 2024 22:36

சென்டிமென்ட் காட்சிகளில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது!


Hari
அக் 30, 2024 06:32

திராவிட ஓசி பிண்டமே


Barakat Ali
அக் 29, 2024 22:26

ஸ்டிக்கர் ஒட்டிக்கவாச்சும் அனுமதி கொடுக்கணும் .........


சிந்தனை
அக் 29, 2024 22:18

ஓட்டைகள் இல்லாத சட்டம் நாட்டுக்கு மிகவும் நல்லது


GMM
அக் 29, 2024 21:51

மத்திய அரசு என்பது அனைத்து மாநில உறுப்பினர்கள் கொண்டது. தேசிய ஆயுஷ் மான் திட்டதை டெல்லி, மம்தா மாநில நிர்வாகம் ஏற்க மறுப்பது தவறான சட்ட நடைமுறை. மாநில நிர்வாகம் சுகாதார நல திட்டங்களை முடக்க முடியாது. தான் புதிய திட்டம் அறிமுகம் செய்யலாம். தேர்வு மக்கள் விருப்பம். நோய் பரவும். எல்லை தாண்டி செல்லும். தேர்தல் ஆணையம் /நீதிமன்றம் மக்களிடம் புகார் பெற்று, மாநில நிர்வாகத்தை முடக்க முடியும். /டிஸ்மிஸ் செய்ய முடியும்.


புதிய வீடியோ