உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; ஒரு லட்சம் பேருக்கு வேலை; சரமாரியாக அள்ளி விடுகிறது காங்கிரஸ்!

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; ஒரு லட்சம் பேருக்கு வேலை; சரமாரியாக அள்ளி விடுகிறது காங்கிரஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு ஓட்டளித்தால் மாநில அந்தஸ்து, ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதிகள் அறிவித்தார்.ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில், தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், 5 தேர்தல் வாக்குறுதிகளை கார்கே அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: * காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு ஓட்டளித்தால் மாநில அந்தஸ்து வழங்கப்படும். * பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.* பெண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.* ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உடல்நலக் காப்பீடு வழங்கப்படும்.* பொது விநியோக முறை மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.* மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட காஷ்மீர் பண்டிட் குடியேற்றவாசிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். ஓ.பி.சி., பிரிவினர் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவார்கள்.* காஷ்மீரில் காலியாக உள்ள ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்புவோம். * சுற்றுலா மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்துவோம். கடந்த பல ஆண்டுகளில் 4,400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறப்போம். * காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க பாடுபடுவோம். நாங்கள் அதை எப்படிச் செய்வோம் என்று அவர்கள் (பா.ஜ.,) தொடர்ந்து கேட்கிறார்கள்? மக்கள் எங்களுடன் இருக்கும்போது நாங்கள் அதைச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

S.VENKATESAN
செப் 18, 2024 20:39

இந்த காங்கிரஸ் கட்சி தேசத்தை ஆண்ட கட்சி அப்படினு சொல்லவே அசிங்கமா இருக்கு


Subash BV
செப் 13, 2024 19:25

Muslim RAHULS Congress gives all such Guarantees to get the power. Once in, they start all kinds of scams in addition to looting the innocents and helpless. Result, no infrastructure developments happens in that region KARNATAKA IS AN EXAMPLE. TRAFFIC JAMS AND POTHOLES EVERYWHERE. THE CM IS ALREADY IN THE COURT. BE ALERT.


ராமகிருஷ்ணன்
செப் 12, 2024 22:38

காங்கிரஸ் சொல்லும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு பணம் எப்படி கிடைக்கும். அதுக்கு என்ன திட்டம் இருக்கு. முழு காஷ்மீரை பிளாட் போட்டு விற்பனை செய்ய போறீங்களா.


kulandai kannan
செப் 12, 2024 21:59

அந்த 370??


என்றும் இந்தியன்
செப் 12, 2024 16:59

இந்த செய்தியை இப்படி படியுங்கள் அதன் சரியான அர்த்தம் புரியும்." காஷ்மீருக்கு பாகிஸ்தான் மாநில அந்தஸ்து ஒரு லட்சம் பாகிஸ்தானியர்களுக்கு வேலை"


ram
செப் 12, 2024 16:56

இதைத்தான பா.ஜ.க செய்து காட்டியது.. உங்களுக்கு இதை சொல்ல வெட்கமா இல்லை..


ஆரூர் ரங்
செப் 12, 2024 15:12

பயங்கரவாதம் காஷ்மீரில் உருவாவதற்கே சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த பெரும் தில்லுமுல்லுகள்தான் காரணம். இப்போ பிரிவினைவாத கட்சிகளுடன் கூட்டு வேறு. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் ஜனாதிபதி ஆட்சி தொடரப் போவது நிச்சயம்.


Nagarajan D
செப் 12, 2024 15:00

எங்கடா 1 லட்சம் பேருக்கு வேலை? பப்பு வீட்டிலேயே இல்லை அவங்கம்மா வீட்டிலேயா? ஆனாலும் நீத்தாண்ட ஆகச்சிறந்த கூஜா கொத்தடிமை


vijai
செப் 12, 2024 13:54

பாறாங்கல் ?


nagendhiran
செப் 12, 2024 13:02

ஒருவரை ஏமாற்ற முதலில் அவர்களோட ஆசையை தூண்டனும்? அதை பப்பு கூட்டம் சிறப்பாக செய்கிறது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை