உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவுக்கு பதிலடி: பி - 81 போர் விமானம் வாங்குவது நிறுத்தம்

அமெரிக்காவுக்கு பதிலடி: பி - 81 போர் விமானம் வாங்குவது நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்ததற்கு பதிலடியாக, அந்நாட்டிடம் இருந்து ஆறு 'பி - 81 பொசைடன்' போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து, 'பி - 81 பொசைடன்' போர் விமானங்களை நம் ராணுவ அமைச்சகம் வாங்கி வருகிறது. கடந்த 2009ல் முதற்கட்டமாக, 12 'பி - 81' ரக போர் விமானங்கள் முதன்முதலாக வாங்கப்பட்டன. அடுத்ததாக, 2016ல், நான்கு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த விமானங்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணிகளுக்கு இந்த போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கடல்சார் கண்காணிப்பு பணியில், இந்த போயிங் ரக விமானங்கள் பெரும் உதவியாக இருந்த நிலையில், மேலும் பல விமானங்களை வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2021ல், அமெரிக்க வெளியுறவு துறையுடன், நம் நாட்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் ஆறு போர் விமானங்களை வாங்குவதற்காக 20,572 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, இந்த ஒப்பந்தம் தாமதமானது. இந்த சிக்கலான சூழலில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா, அதை 50 சதவீதமாக நேற்று உயர்த்தியது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கவும், மாற்றி அமைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஆறு பி - 81 பொசைடன் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முடிவு கடந்த 3ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ரூ.67,000 கோடி ராணுவ கொள்முதலுக்கு ஒப்புதல்!

நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீண்ட நேரம் இயங்கக்கூடிய ட்ரோன்கள், மலைப்பகுதியில் பொருத்தக்கூடிய ரேடார்கள், ரஷ்ய தயாரிப்பில் உருவான எஸ் - 500 ரக ஏவுகணை அமைப்புகள், சி - 17 மற்றும் சி - 130 ஜே போக்குவரத்து விமானம் போன்றவை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இலக்குகளை துல்லியமாக குறிவைக்க உதவும் கடற்படையின் பிரமோஸ் மற்றும் பராக் - 1 ஏவுகணை அமைப்புகளை பராமரிக்கவும், ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை யிலான டி.ஏ.சி., எனப்படும் ராணுவ கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

P. SRINIVASAN
ஆக 07, 2025 14:26

சரியான முடிவு.. பாராட்டுக்கள்


vivek
ஆக 07, 2025 15:40

நீயா....இன்னைக்கு பேட்டா வரலையா......


Ramesh Sargam
ஆக 07, 2025 12:45

ட்ரம்ப் நெனெச்சான் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை மிரட்டியது போல மோடியின் கீழ் உள்ள பாஜக ஆட்சியை மிரட்டலாம், உருட்டலாம் என்று. மோடி திருப்பி அடிப்பார் என்று அந்த ட்ரம்ப் நெனெச்சுக்கூட பார்க்கவில்லை. மோடி ஒன்றும் வாய்பேசாத மன்மோகன் சிங்க் அல்ல.


Apposthalan samlin
ஆக 07, 2025 11:53

மேக் இன் இந்தியா இன்னு உருட்டுனான் பின் ஊசி கூட சீனா விடம் இருந்து தான் வாங்குகிறோம்


vivek
ஆக 07, 2025 14:30

அப்போஸ்தலர் மூளையை கூட சீனாவிடம் வாங்கினார்


Swaminathan L
ஆக 07, 2025 09:16

முன்பு போல் தற்போது அமெரிக்காவைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் நம் தேசத்துக்கு இல்லை. இராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு சாதனங்கள் என்று பல விஷயங்களில் இஸ்ரேல், ஃப்ரான்ஸ் என்று பல நாடுகளிடம் நம் வர்த்தகம் நன்றாகத் தொடர்கிறது. அமெரிக்காவின் வழக்கமான பெரியண்ணன் மனோபாவம் இனியும் இங்கே செல்லாது. ட்ரம்ப்பின் பேச்சுக்களுக்கு மண், அறிவிப்புகளுக்கும் பொதுவெளியில் வெளிப்படையாக, நேரிடையாகக் கண்டனம் தெரிவிக்கவோ, அதிரடி நடவடிக்கைகள் எடுப்பேன் என்று அறைகூவல் விடவோ இது அரசியல் களமல்ல. தேசத்தின் நன்மை, மதிப்பு, மரியாதை, எதிர்கால நலன் காக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செவ்வனே செய்ய நம் அரசால் முடியும், அதைச் செய்யட்டும்.


Suppan
ஆக 07, 2025 09:01

2016 ல் ஆறு சதவீத டிஜிட்டல் வரி விதிப்பைப்பற்றி ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இது வரை அமல் செய்யப்படவில்லை. தற்பொழுது நீக்கப்பட்டது. அரசு இதை கையில் எடுக்கலாம். எடுக்கப்பட்டால் கூகுல் மெட்டா அமேசான், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்ற நிறுவனங்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் இந்திய ரஸுக்கு வரி செலுத்த நேரிடும். .


Anand
ஆக 07, 2025 10:59

youtube ஐ அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா, அதில் ஒரு பத்து சதவிகிதம் வரியை உயர்த்தினாலே போதும்...


S.V.Srinivasan
ஆக 07, 2025 07:42

டிரம்ப், யாருகிட்ட? இது 21வது CENTURY மோடிஜி அரசு. நீங்க நினைக்கிற மாதிரி 19த் CENTURY நேரு, இந்திரா அரசு இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 07:32

கரெக்ட் ..... ஒப்பந்தத்தை எந்த நிலையிலும் இரு தரப்பும் முடித்துக்கொள்ளலாம் என்று ஒரு ஷரத்து இருக்கலாம் ..... ஆகவே இந்தியா நிறுத்தியிருக்கிறது .... எங்கே அடிச்சா வலிக்குமோ அங்கே அடிப்பது நல்லது ....... இதற்கும் இங்கே காங்கிரஸ், திமுக கொத்தடிமைகள் எதையாவது புலம்பி கதறக்கூடும் .....


N.Purushothaman
ஆக 07, 2025 12:48

இங்க கூட சில திருட்டு திராவிட அனுதாபிங்க ஒரு எழவும் தெரியாமல் வந்து வாந்தி எடுப்பாய்ங்க ..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 14:41

சரியாச் சொன்னீங்க ......


பாமரன்
ஆக 07, 2025 06:36

இது வழக்கமான யூகம் அல்லது செய்தியாளரின் விருப்பம் மாதிரி தெரியுது. ஒடனே தேஷ் துரோகின்னு ரெண்டு ரூபா கூலிப்படைகள் வரும். செய்தி உண்மைன்னா இதை அரசு அறிக்கையா அல்லது சம்பந்தப்பட்ட ஆபீஸர் பேட்டியா சொல்லனும்.. நம்ம ஜி வாய தொறக்க வாய்ப்பில்லைங்கிறதால இந்த சின்ன எதிர்பார்ப்பு. இல்லைன்னா வழக்கம் போல ஃபீலிங் நியூஸ் அப்பிடின்னு போயிக்கினே இருப்போம்


guna
ஆக 07, 2025 07:41

சுய அறிவு உனக்கு இருந்தா புரியும் பாமர பகோடா


Karthikeyan Palanisamy
ஆக 07, 2025 07:47

எனக்கென்னமோ நீங்க சொல்றது தான் உண்மை மாதிரி தெரியுது… நான் ஊபிஸ் இல்லை


Anand
ஆக 07, 2025 10:53

உன்னோட கருத்துக்கள் யாவும் ஒரு இந்திய ரத்தம் உடம்பில் ஓடும் நபரை போல தெரியவில்லை, இதெல்லாம் ஒரு பொழப்பு, இதற்கு பதில்....


பாமரன்
ஆக 07, 2025 12:07

வேஸ்ட் பீஸ்கள்...


Naga Subramanian
ஆக 07, 2025 06:08

உண்மையான வளர்ச்சியை காண்கிறது நமது பெருமை மிக்க பாரதம். வாழிய பாரதம் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த்


Priyan Vadanad
ஆக 07, 2025 05:16

இதுபோல நடக்குமா என்றிருந்தேன். முள்ளுக்கு முள்ளுதான் மருந்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை