உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!

புதுடில்லி: 'தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும்' என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.தமிழகம் உள்பட 26 தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று (அக் 31) சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, நவம்பர் 3ம் தேதி தலைமைச் செயலாளர்களை நேரில் வருவதற்குப் பதிலாக, அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கையை, சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. அப்போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: நாங்கள் அவர்களை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லும்போது, ​​அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை.நகராட்சி நிறுவனங்கள், மாநில அரசுகள் பல ஆண்டுகளாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளைச் சமாளிக்க நீதிமன்றம் நேரத்தை வீணடிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தலைமைச் செயலாளர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

raghavan
அக் 31, 2025 20:46

ஒரு தெருவுக்கு 40 தெரு நாய்கள் உள்ளன. இரவுப் பணி முடித்து செல்பவர்கள் பாடு தான் இருப்பதில் மோசம்.


m.arunachalam
அக் 31, 2025 20:43

தெரு நாய்கள் மட்டும் அல்ல. விவசாயத்தை மயில்கள் நாசம் செய்கின்றன. குரங்குகளால் வேறு விதமான தொல்லைகள். பரிகாரம் கட்டாயம் தேவை.


S.VENKATESAN
அக் 31, 2025 20:10

அடேய் ப்ளூ கிராஸ் சிங்கம் ரோட்டுல திரிஞ்சா என்ன பண்ணுவீங்க அதுக்கும் பாவம் பார்ப்பீங்களா


Anantharaman Srinivasan
அக் 31, 2025 19:06

தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் ஒரு உபயோகமும் கிடையாது. சொந்தமாக லைசென்ஸ் வாங்கி வளர்க்கும் நாய்களைத்தவிர தெருநாய்களை தடைசெய்தால் தான் மக்ககளுக்கு நிம்மதி கிடைக்கும்.


சிட்டுக்குருவி
அக் 31, 2025 18:41

தெருநாய்களுக்கு ஒரே தீர்வு ஆர்வமுள்ள மக்கள் தத்தெடுப்பு .அதற்கு வழிவகுக்க மாநகராட்சிகள் அளவில் காப்பகங்கள் அமைத்து ,ஆரோக்கிய பரிசோதனை செய்து ,சில அடிப்படை பயிற்சி அளித்து அதனுடைய போட்டோக்களை ஊடங்கங்களில் பிரசுரித்து தத்தெடுக்க விளம்பரம் செய்வது.அதற்கு மக்களிடையே தேவையான பங்களிப்பை கேட்டுப்பெறுவது .ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தேவையான மூலாதாரத்தை கொடுத்து அவர்கள் பயிற்சி அளித்து விற்பனை செய்து அவர்களை பயனடைய செய்வதும். இதை செய்ய முடியாத நாய்களை மிருக சாலைக்கு அனுப்பலாம் .


Oviya Vijay
அக் 31, 2025 17:45

காரில் செல்பவர்களுக்கு, மக்கள் பிரச்சினை, எப்படி புரியும்...அன்றாடம் நாய்க்கடி படுவது சாமானியர்கள் தானே...


Ravi
அக் 31, 2025 15:39

தெரு நாய்கள் விசயத்தில் தெளிவான உத்தரவு இல்லாமல் இதுவரை குழப்பியதே உச்ச நீதி மன்றம்தான்.


Yasararafath
அக் 31, 2025 15:37

தமிழ்நாடு மற்றும் சென்னையில் தெருக்கள், சந்துகள், முக்கியமான சாலைகள் பார்க்கும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நாய்களை கொல்ல வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உடனடியாக நிரந்தரமாக தீர்வு அளிக்க வேண்டும்.


duruvasar
அக் 31, 2025 14:46

நாய்களின் ரவுடித்தனம் அதிகமாகத்தான் இருக்குதுங்க .


Venkataraman Subramania
அக் 31, 2025 14:40

Rightly said so by Honourable Judges and Apex Court. No officials and rulers are bothered about the deaths of Dog Bites. In fact, I request and urge the honourable Apex Court to stay on PETA, also a strigent punishment for those feeding stray dogs on roadside / near the parks / near the houses / in the street etc. Also, all sanitation team should be instructed not to feed dogs / stray dogs. They are the biggest hinderance on this menance


சமீபத்திய செய்தி