உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜப்பானில் நிலநடுக்க வாய்ப்பு : இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை கடிதம்

ஜப்பானில் நிலநடுக்க வாய்ப்பு : இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை கடிதம்

டோக்கியோ: ஜப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.கடந்த வியாழக்கிழமை (ஆக.08) ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் மியாசாகியில் சக்தி நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது 7:1 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்புள்ளது. அந்நாட்டு அரசு இயற்கைப் பேரிடர்களுக்குத் தயார் நிலைக்கான ஆலோசனையை அறிவித்துள்ளது. எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகள் அறிவிக்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இது தொடர்பாக கடிதம் ‛எக்ஸ்' வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அபய்சிங்
ஆக 10, 2024 09:31

ஆம் அங்கே நாம மடும் கவனமா இருக்கணுமாம். எல்லோரும் கவனமா இருக்க வாணாமா? பேசாம பெசல் விமானம் வெச்சு எல்லாரையும் கூட்டிட்டு வந்துருங்க.


Kasimani Baskaran
ஆக 10, 2024 07:26

ஜப்பானில் எப்பொழுதுமே நிலநடுக்கத்துக்கு தயாராகவே இருப்பார்கள். ஆகவே அங்கு புதிதாக போகும் பொழுது கவனமாக அவர்களது நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை