உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் மாணவர் கைது

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் மாணவர் கைது

புதுடில்லி: டில்லியில் மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தொலைபேசி, இ - மெயில் வாயிலாக சமீபகாலமாக அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. தொடர் மிரட்டல்களை அடுத்து, டில்லி போலீசார் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.இந்நிலையில், டில்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இ - மெயில் வாயிலாக, மர்ம நபர் நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மோப்பநாய்களுடன் போலீசார் சென்று ஆய்வு செய்ததில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பிளஸ் 2 படிக்கும் மாணவரை கைது செய்துள்ளோம். அவரிடம் நடத்திய விசாரணையில் தேர்வு எழுதுவதை தவிர்க்க, விடுமுறை அளிக்கும் வகையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ஒரே நேரத்தில் 23 பள்ளிகளுக்கு, தலா ஆறு முறை இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை