உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவியர் ஆபாச வீடியோ வழக்கு; உடுப்பி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

மாணவியர் ஆபாச வீடியோ வழக்கு; உடுப்பி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

உடுப்பி : நர்சிங் கல்லுாரி விடுதியின் கழிப்பறையில் கேமரா பொருத்தி, மாணவியரை ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக, உடுப்பி நீதிமன்றத்தில் 1,100 பக்க குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.உடுப்பி மல்பே பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் நர்சிங் கல்லுாரி விடுதியில், மாணவியர் தங்கி படிக்கின்றனர். விடுதியின் கழிப்பறையில் கேமரா பொருத்தி, ஒரு சமூக மாணவியரின் குளியல் காட்சிகளை, இன்னொரு சமூக மாணவியர் 3 பேர் ஆபாச வீடியோ எடுத்தனர்.இதுபற்றி அறிந்த சில மாணவியர், ஆபாச வீடியோ எடுத்த மாணவியரிடம் தகராறு செய்தனர். இந்த பிரச்னை விஸ்வரூபமாக மாறியது. தவறு செய்த மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.இதனால் ஆபாச வீடியோ எடுத்த மூன்று மாணவியரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில் வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, அரசு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவியர், வீடியோ எடுத்த மாணவியர், கல்லுாரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, போலீசார் தகவல் பெற்று கொண்டனர்.இந்த வழக்கு தொடர்பாக, உடுப்பி நீதிமன்றத்தில் சி.ஐ.டி., போலீசார் 1,100 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ