உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் 16 இட்லி சாப்பிட்டவருக்கு பரிசு போட்டி போட்டு தின்ற மாணவன் அட்மிட்

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் 16 இட்லி சாப்பிட்டவருக்கு பரிசு போட்டி போட்டு தின்ற மாணவன் அட்மிட்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தில் 16 பெரிய இட்லிகளை விழுங்கிய இளைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. போட்டி போட்டு மது குடித்த மாணவர் மயக்கம் அடைந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே ஓணம் பண்டிகையை ஒட்டி இளைஞர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பெண்கள் என 17 பேர் கலந்து கொண்ட இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது. இதற்காக பெரிய அளவிலான இட்லி அவித்து வைக்கப் பட்டிருந்தது. இதில் குன்னும்புரம் பகுதியைச் சேர்ந்த ஜிதின் ஜிஜி என்பவர் 16 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் பெற்றார். 14 இட்லி சாப்பிட்ட கட்டப்பனை பாலியேக்கல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும், 13 இட்லி சாப்பிட்ட புமங்கள் ரூ.1001ம் பரிசாக பெற்றனர். இதுபோல திருவனந்தபுரத்தில் கட்டுமான பணி நடந்த வீட்டில் 7 மாணவர்கள் இணைந்து மது குடிக்கும் போட்டி நடத்தியுள்ளனர். போட்டி போட்டு தண்ணீர் கலக்காமல் மது குடித்துள்ள னர். இதில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார் இதை கண்டு பயந்த ஐந்து மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒருவர் மட்டும் அழுதபடி மியூசியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவனை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தவர். மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை