உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு திருத்த மசோதா தாக்கல் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு

வக்பு திருத்த மசோதா தாக்கல் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி :வக்பு திருத்த மசோதா குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை முடிவடையாததால், கால நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கோடு, வக்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, ஆக., 9ல் இந்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

ஆஜராகி விளக்கம்

பா.ஜ.,வைச் சேர்ந்த ஜகதாம்பிகா பால் தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு, மசோதா தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வந்தது. இதுவரை, 13 வக்பு வாரியங்களில் ஆய்வு செய்ததுடன், ஏழு மாநிலப் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இதைத் தவிர, 42 அமைப்புகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளன. இரண்டு நேரடி ஆய்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால், இரண்டாவது நேரடி ஆய்வுக் கூட்டத்தை, குழுவில் உள்ள எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதற்கிடையே, 92.28 லட்சம் பரிந்துரைகள், இ - மெயில் வாயிலாகவும், 4.99 லட்சம் பரிந்துரைகள் நேரடியாகவும் வழங்கப்பட்டுள்ளன.

கருத்து மோதல்

இந்த பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பு இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. முறையாக விசாரணை நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.இந்தக் கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நாளை முடிவடைய உள்ள நிலையில், இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகளைத் தவிர, பா.ஜ.,வைச் சேர்ந்த சில எம்.பி.,க்கள், குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறினர்.இதையடுத்து, கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை பதவி காலத்தை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.அதனால், இந்த மசோதா அடுத்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
நவ 28, 2024 13:51

எங்கள் குடும்பத்தில் சொத்து என்றால் முன்னோர்கள் காலத்திலிருந்து சேர்த்த சொத்துதான்.. முறைகேடாக எந்த சொத்தையும், யாரிடமிருந்தும் அபகரிக்கவில்லை.. அல்-பகரா 2:188 ....“ ஒருவர் மற்றவரின் சொத்தை அநியாயமாக எந்தவொரு சட்ட விரோதமான வழியிலும், எ.கா. திருடுதல், கொள்ளை யடித்தல், ஏமாற்றுதல் அல்லது ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகள் உங்கள் வழக்குகளை முன்வைக்கும் முன் லஞ்சம் கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சொத்தில் ஒரு பகுதியை நீங்கள் தெரிந்தே பாவமாக சாப்பிடலாம். ”


sugumar s
நவ 28, 2024 12:56

This needs to be done immediately and recover the property acquired against fairness


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 28, 2024 12:52

பாஜக தனிப் பெரும்பான்மை பெற்ற அரசாக அமைந்திருந்தால் இந்நேரம் மசோதா நிறைவேறியிருக்கும்... இதை பாஜக அரசு கடந்த ஆட்சிகளில் செய்திருக்கலாம் ... இனி வாய்ப்புக்கள் குறைவே .....


குமார்
நவ 28, 2024 12:26

எதுக்கு சட்டம். வக்ப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டது இல்லையே. என்ன பயம். பணமதிப்பிழப்பு மாதிரி ஒரே நாளில மாத்திரலாமே.... ஏன் BJP யோசிக்கிறது


ஆரூர் ரங்
நவ 28, 2024 10:57

எதுக்கும் அவரவர் பெண்டாட்டி பிள்ளைகளை கவனமாக பாத்துக்கங்க.


Baskar
நவ 28, 2024 09:21

ஒரு வருஷத்துல எத்தனை கோடி நிலங்கள் வக்ப் போர்டு கைக்குள்ள போக போவுதோ ? ஆண்டவா காப்பாத்து


Dharmavaan
நவ 28, 2024 07:37

மசோதாவுக்கு பதில் அவசரம் சட்டம் வேண்டும்


N Ganapathy Subramanian
நவ 28, 2024 07:04

Why a JPC report sought? when this bill passed by Khangress govt did they seek permission report from Hindus. Is this the way secular government works?


Dharmavaan
நவ 28, 2024 07:35

எதற்கும் விட்டு கொடுக்கிறார் கேவலம்


நிக்கோல்தாம்சன்
நவ 28, 2024 06:14

இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் அந்த அமைப்பு வேண்டுமா ?


Kasimani Baskaran
நவ 28, 2024 06:09

கூட்டுப்புழு என்பது ஒரு வீணாய்ப்போன அமைப்பு. 75 ஆண்டு வரலாற்றில் அவர்கள் சாதித்ததாக எதுவும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை