உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டில்லி பாதுகாப்புக்காக வருகிறது சுதர்சன சக்கரம் கவசம்

 டில்லி பாதுகாப்புக்காக வருகிறது சுதர்சன சக்கரம் கவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், மிக முக்கியமான மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள வி.ஐ.பி., மண்டலங்களில், வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், 5,181 கோடி ரூபாய் மதிப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நி றுவ, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பதிலடி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப் பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தகர்த்தன. தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்கள் மோதல் நடந்தது. 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஏவுகணைகள் வாயிலாக பாக்., நடத்திய தாக்குதலை, நம் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. குறிப்பாக, மே 7- - 8ல், இரவு நேரத்தில் நிகழ்ந்த வான்வழி ஊடுருவல்களை நம் படைகள் இடைமறித்து தாக்கின. இதைத் தொடர்ந்து, ஆக., 15ல், நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, 'சுதர்சன சக்கரம் என்ற பெயரில் உள்நாட்டிலேயே ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும். அது, 2035க்குள் செயல்பாட்டுக்கு வரும்' என்றார். நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகள், நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளுக்கு ஒரு விரிவான பாதுகாப்பு கவசத்தை நிறுவுவதே இதன் நோக்கம். இந்நிலையில், சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், மிக முக்கியமான மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள வி.ஐ.பி., மண்டலங்களில், வான் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 5,181 கோடி ரூபாய் மதிப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, டில்லியை சுற்றி, 30 கி.மீ., சுற்றளவில் நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பல அடுக்கு பாதுகாப்பை வழங்கும். மேலும், ட்ரோன்கள், ஏவுகணைகளின் நிகழ் நேர இருப்பிடத்தை அறிந்து இடைமறித்து அழிக்கும். இறக்குமதி உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், அதே நேரத்தில் முக்கியமான உட் கட்டமைப்புகள் மற்றும் வி.ஐ.பி., மண்டலங்களில் நிகழ்நேர வான் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. மேலும் இது, நம் நாட்டின் தற்சார்பு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ