உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்து கொண்டே மாஜி முதல்வரை வீழ்த்திய சுயேட்சை

சிறையில் இருந்து கொண்டே மாஜி முதல்வரை வீழ்த்திய சுயேட்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் அப்துல் ஷேக் ரஷீத் என்பவர் சிறையில் இருந்து கொண்டே சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை வீழ்த்தினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத், இவர் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர்அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போன்று பஞ்சாபின் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால்சிங், 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இவரும் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் குல்பிர்சிங்ஜிரா வை 1 லட்சத்து 72 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சிறையில் உள்ள இரு சுயேட்சை எம்.பி.க்களும் எவ்வாறு பதவியேற்பர் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
ஜூன் 06, 2024 12:29

சிறைக்கு செல்பவர்கள், சென்றவர்கள் போட்டியிடலாம், பதவியில் இருப்பவர்கள் சிறைக்கு செல்லலாம். மொத்தத்தில் முக்கிய பிரமுகர்களும் சிறைச்சாலைகளும் பின்னிப்பிணைந்த ஒரு சங்கமம். வாழ்த்துக்கள். அரசுத் துறைதான் மிகவும் பாவம், ஒரு நாள் வீட்டுக்கு காவல் மறுநாள் அவர்களை சிறைக்கு அழைத்துச் சென்று அங்கும் இதே காவல். எதற்க்காக இந்த காவல் என்று அவர்களுக்கு தெரியாது . அருமையாக உள்ளதே . வந்தே மாதரம்


spr
ஜூன் 06, 2024 04:19

"சிறையில் உள்ள இரு சுயேட்சை எம்.பி.க்களும் எவ்வாறு பதவியேற்பர் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது." இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்குத் தலை வணங்கி மோடி முழு அதிகாரத்தில் இருந்த போதே இது போல அதிரடித் தீர்ப்புக்களை வழங்கிய உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் இவர் ஜன நாயகக் கடமையாற்ற இவரை விடுதலை செய்யும். சிறையிலிருந்து ஒருவர் அமைச்சராக பணியாற்றவில்லையா


siva
ஜூன் 05, 2024 22:12

கெஜ்ரிவால் ஜெயில்ல இருந்து ஆளும் போது , இவங்க பண்ணக்கூடாதா ?


theruvasagan
ஜூன் 05, 2024 22:05

இவங்கள்ளாம் ஜெயிலுக்கு போய் அப்புறம்தான் எம்.பி ஆனாங்க. ஆனால் குஜிலிவால் முதலமைச்சரா ஆகி பின்னாடி ஜெயிலுக்கு போனாரு. அது இல்ல கெத்து.


sankaranarayanan
ஜூன் 05, 2024 20:30

அதுதானைய்யா இந்திய அரசியல் - சிறைச்சாலையிலிருந்துகொண்டே ஆட்சியையும் செய்யலாம் அக்கிரமும் செய்யலாம் இல்லையே ஜாமீனாவது வாங்கிக்கொண்டு வெளியே வந்து கொலையும் செய்யலாம் அரசியலும் செய்யலாம் இப்போது இங்கே பல அரசியல்வாதிகள் ஜாமீன் என்ற போர்வையே போர்த்திக்கொண்டுதான் வெளியே வந்து அதிக தைரியத்துடன் அரசியல் செய்கிறார்கள் அதற்கும் இங்கே நீதிமன்றங்கள் முழு ஒத்துழைப்பு


Nandakumar Naidu.
ஜூன் 05, 2024 20:22

சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இந்த அவலம் இந்தியாவில் தான் நடக்கிறது.


Ramesh Sargam
ஜூன் 05, 2024 19:47

பின் வரும் காலங்களில் பலபேர் சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறுவார்கள். அங்கிருந்தே ஆட்சியும் புரிவார்கள்.


HoneyBee
ஜூன் 05, 2024 21:08

கெஜ்ஜு கூட இதுக்கு தான் ஆசை படறான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை