சிக்கபல்லாப்பூரில் சுமலதா? பா.ஜ., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு!
சிக்கபல்லாப்பூர் : வெளியாட்களுக்கு சிக்கபல்லாப்பூர் தொகுதியில், 'சீட்' கொடுக்க, பா.ஜ., -- எம்.எல்.ஏ., விஸ்வநாத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.சிக்கபல்லாப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., சீட்டுக்கு, முன்னாள் அமைச்சர் சுதாகர், எலஹங்கா பா.ஜ., -- எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகன் அலோக் இடையில் போட்டி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும் சீட் கொடுக்காமல், முன்னாள் அமைச்சர் ரவி அல்லது மாண்டியா எம்.பி., சுமலதாவுக்கு சீட் கொடுக்க, பா.ஜ., மேலிடம் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.இதற்கிடையில், சுமலதாவுக்கு பா.ஜ., மேலிடம் டில்லி வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. நேற்று மதியம் டில்லி புறப்பட்டு சென்றார். இவருக்கு விஸ்வநாத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.நேற்று அவர் அளித்த பேட்டி:சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளரை அறிவிக்க எதற்கு தாமதம் என்று தெரியவில்லை. வெற்றி பெறும் வேட்பாளருக்கு சீட் தர வேண்டும். வெளியாட்களுக்கு சிக்கபல்லாப்பூர் சீட் என்று பேச்சு அடிபடுவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். வெளியாட்களுக்கு சீட் தர கூடாது என்று, எங்கள் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். நானும், சுதாகரும் பேசினோம். வெளியாட்களுக்கு வாய்ப்பு தர கூடாது என்று, இருவரும் முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.