உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனவரிக்கு பின் களமிறங்குகிறார் சுமலதா

ஜனவரிக்கு பின் களமிறங்குகிறார் சுமலதா

மாண்டியா: ''ஜனவரிக்கு பின், மாண்டியாவில் பா.ஜ.,வை வலுப்படுத்துவேன்,'' என, முன்னாள் எம்.பி., சுமலதா தெரிவித்தார்.நடப்பாண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., சுமலதா, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவே இல்லை.தேர்தல் முடிந்த பின், பா.ஜ.,வின் நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ பங்கேற்காமல் இருந்தார்.இந்நிலையில், நேற்று நகரில் உள்ள தனது சாமுண்டீஸ்வரி இல்லத்துக்கு சுமலதா வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, எனது தொகுதியை விட்டுக்கொடுத்தேன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருந்த பணியால், என் கால்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டேன்.அத்துடன் எனக்கு ஓய்வும் தேவைப்பட்டதால், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்நேரத்தில் பல கிராமங்களுக்குச் சென்றிருப்பேன்.வரும் ஜனவரிக்கு பின், மாண்டியாவில் பா.ஜ.,வை வலுப்படுத்துவேன். நான் எம்.பி.,யாக இருந்தபோது துவக்கிய பணிகள் குறித்து ஆய்வு செய்வேன். கட்சிப் பணி செய்ய, தலைமை அறிவுறுத்தி உள்ளது.மாண்டியாவில் பா.ஜ., வலுப்பெற வேண்டும். சென்னப்பட்டணாவில் பா.ஜ., வேட்பாளர் களம் இறங்கியிருந்தால், என்னை அழைத்திருப்பர். அங்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதால் என்னை அழைக்கவில்லை. எதையும் எதிர்பார்த்து நான் பா.ஜ.,வில் இணையவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை