உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச விண்வெளி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை ஏற்றி சென்ற, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது. அவர்களை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

59வது பிறந்தநாள்!

இந்நிலையில், தனது 59வது பிறந்தநாளை நேற்று (செப்.,19) நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.தற்போது தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தில் இருக்கும் மூத்த விண்வெளி வீரர் சுனிதா, பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றினார். அவர் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அவர் அடுத்த பிறந்தநாளை பூமியில் வைத்து கொண்டாடி மகிழ்வார் என சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டில் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் அவரது பிறந்தநாளை அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
செப் 20, 2024 16:22

குழந்தாய் சீக்கிரம் பூமிக்கு திரும்பி வா பிறகு என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம்???


Sureshkumar
செப் 20, 2024 16:04

வாழ்த்துக்கள் சுனிதா நீங்கள் மற்றும் உங்கள் நண்பரது மனோதிடம் அருமை


Sureshkumar
செப் 20, 2024 16:04

வாழ்த்துக்கள் சுனிதா நீங்கள் மற்றும் உங்கள் நண்பரது மனோதிடம் அருமை


P. VENKATESH RAJA
செப் 20, 2024 15:55

விண்வெளி பறவை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்துக்கள்.. மீண்டும் சொல்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்


சமூக நல விரும்பி
செப் 20, 2024 15:13

Happy birthday sunithaji


subramanian
செப் 20, 2024 15:00

அண்டப் புளுகு ஆகாச புளுகு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை