மேலும் செய்திகள்
2வது ஒரு நாள் கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா வெற்றி
4 hour(s) ago
மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்
6 hour(s) ago | 22
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துக்கு கேரளா அரசு நிலம் வழங்கும் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.1964ம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நெட்டு கல்தேரியில் உள்ள நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இது 2014 மே மாதம் முடிவுக்கு வந்தது. மொத்தமுள்ள 487 நிலத்தில் 12 ஏக்கர் கல்லூரி அமைக்கவும்,16 ஏக்கர் பால் வளத்துறைக்கும் 3 ஏக்கர்நிலம் திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்துக்கும் ஒதுக்கப்பட்டது. 100 ஏக்கர் நிலம் சிறைச்சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்த கேரள அரசு, எஞ்சிய நிலம் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் எனக் கூறியிருந்தது. இந்த நிலத்தில் 180 ஏக்கர் நிலம் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் திருவனந்தபுரம் கழக (பிஏடிஎல்) நிறுவனத்துக்கும், 32 ஏக்கர் நிலம் எஸ்எஸ்பி அமைப்புக்கும் ஒதுக்குவது என கேரள அரசு திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக தேசிய தடயவியல் பல்கலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், திறந்த வெளி சிறைக்கான நிலத்தை வேறு காரணங்களுக்காக மாற்ற நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.இதனை எதிர்த்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது.இதனை விசாரித்த விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் தலைமையிலான அமர்வு, பிஏடிஎல் நிறுவனத்துக்கு ஒதுக்கும் கேரள அரசின் முடிவுக்கு அனுமதி வழங்கியது.இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிஆர்டிஓவின் கீழ் இருக்கும், பிஏடிஎல் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக 180 ஏக்கர் நிலத்தை ஒதுக்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிநவீன ஏவுகணை தயாரிப்பு மையம் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் 2வது மையம் அமைக்கவும், அத்துடன் எஸ்எஸ்பி பட்டாலியன் மற்றும் தேசிய தடயவியல் அறவியல் பல்கலை அமைக்கவும் வழிவகை செய்யும். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கும் கேரளா அளிக்கும் பங்களிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
4 hour(s) ago
6 hour(s) ago | 22