உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து விபரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடிவு

சொத்து விபரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 14ம் தேதி டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உள்விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்.,1ம் தேதி சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் இந்த சொத்து விபரங்கள், சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பூஷன் ராம்கிருஷ்ணா காவி, நாகர்த்னா, விக்ரம் நாத், மகேஷ்வரி ஆகியோர் ஏற்கனவே சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kulandai kannan
ஏப் 03, 2025 19:08

நீங்க வெளியிட்டாலும்......


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 03, 2025 17:56

ஒவ்வொரு தனி நபருக்கும் அதிக பட்சம் மூன்று வங்கி கணக்குகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒன்று அன்றாட சிலவுகளுக்கு, இரண்டாவது டெபாசிட், மற்றும் உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் செய்ய, மூன்றாவது டீமாட் கணக்குடன் இணைத்து மியுசுவல் ஃபண்ட் மற்றும் பங்கு பரிவர்த்தனை செய்ய. 20-30 கணக்குகள் வைத்துக்கொண்டு ஊழல் செய்வதை தடை செய்ய வேண்டும்.


naranam
ஏப் 03, 2025 16:16

இவர்கள் வெளியிடுவது தான் உண்மை விவரம் என்று எப்படி நம்புவது?


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 16:53

கட்டுக்கட்டாக பணம் எரியவில்லைன்னு வந்த விளக்கத்தையும் நம்பிட்டேன். இன்னி வரைக்கும் ஒரு FIRம் போடல. பூசி மெழுகல்.


GMM
ஏப் 03, 2025 15:34

அரசு அதிகாரிகள் தினமும் பொது மக்களுடன் தொடர்பு. நிர்வாகத்தில் சில சலுகைகள் தர லஞ்சம் பெறமுடியும். அதனால், சொத்து விவரம் சமர்ப்பிப்பர் . தணிக்கைக்கு உட்படும். லஞ்சம் ஒழிப்பு, வருமான வரி துறை செல்லும். நீதிபதி வக்கீலுடன் மட்டும் தொடர்பு. சட்ட விதிமாற்றி தீர்ப்பு சொல்ல முடியாது. லஞ்சம் பெற வழி இல்லை. சொத்து விவரம் தாக்கல் செய்ய அவசியம் இல்லை. எதற்கும் நீதிபதி சொத்து விவரம் பயன்படாது. ஆனால், சட்டம் வளைக்க, தாமதம் படுத்த படுகிறது. பணம் பஞ்சாயத்து செய்கிறது. நீதி, நிர்வாக நடவடிக்கைக்கு கால நிர்ணயம், வக்கீல் மீது புகார் தெரிவித்து நிர்வாக விசாரணைக்கு /தண்டனைக்கு அனுமதி இருந்தால் போதும். இதற்கு தனி அதிகாரம் அமைப்பு தேவை. அரசு நிர்வாக விதிகள் மீறி, அரசை விசாரித்து தண்டிக்க நீதிமன்ற வேலையில்லை. பொது, மக்கள் பிரச்சனை விசாரிக்க தான் நீதி மன்றம். சுமார் 30 கோடி கணக்கில் இல்லாத பணம் நீதிபதி வீட்டில். நிர்வாக விசாரணையை உச்ச மன்றம் எப்படி நிறுத்த, முடக்க முடியும்.? ஆளும் கட்சி உட்பட அனைத்து கட்சியும் மௌனம். குற்ற பயம்.


ஈசன்
ஏப் 03, 2025 15:25

அது மட்டும் போதாது. நீதிபதிகள் ஆனவுடன் அவர்கள் எந்த வக்கீல்களுடனும் பேச்சு வார்த்தை வைத்து கொள்ள கூடாது. நீதிபதிகள் வீட்டிற்கு யாரும் போக கூடாது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் தொலை பேசிகள் ரகசியமாக ஒட்டு கேட்க பட வேண்டியவை. அப்போது தான் இவர்கள் தரும் நீதியை நம்ப முடியும்.


Jayachandran
ஏப் 03, 2025 15:21

வரவேகிறேன்....


Ramalingam Shanmugam
ஏப் 03, 2025 15:12

first u doit


Barakat Ali
ஏப் 03, 2025 15:08

ஒரு வக்கீலோ, டாக்டரோ கூட பல கணக்குகள் மெயின்டெயின் பண்ணுறாங்க ..... ஒரு நீதிபதியால் முடியாதா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை