உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிடைத்தது ஜாமின் : திகாரிலிருந்து மணீஷ் சிசோடியா ரிலீஸ்

கிடைத்தது ஜாமின் : திகாரிலிருந்து மணீஷ் சிசோடியா ரிலீஸ்

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vewqz62j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவும் கடந்த மே 21-ம் தேதி தள்ளுபடியானது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த வக்கில் இன்று (ஆக.09) , மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.ஜாமின் கிடைத்ததையடுத்து இன்று இரவு 7 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரது ஆதரவளார்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Swaminathan L
ஆக 09, 2024 18:14

அமலாக்கத்துறை இந்த வழக்கில் இத்தனை மாதங்களில் ட்ரையல் முடிக்காமல் காலம் தாழ்த்தியதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி அதன் காரணமாகவே நிபந்தனை ஜாமீன் தந்துள்ளது. கால தாமதம் ஏன் என்று அமலாக்கத்துறைக்கே வெளிச்சம்.


Azar Mufeen
ஆக 09, 2024 16:59

தரமான கல்வியை கொடுத்ததற்காக 18 மாதங்கள் சிறைவாசம், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனோ வெளியே உல்லாசம் இதுதான் நமது நீதி


theruvasagan
ஆக 09, 2024 15:55

ஒரு வேளை ஊழல் குற்றத்துக்கு தண்டனை கொடுத்தாலும் மேல் கோர்ட் பெயில்ல விட்டுவிடும். விசாரணை கைதிகளாக இருந்தாலும் சரி குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொன்னாலும் சரி அரசியல்வாதிகளாக மட்டும் இருந்துவிட்டால் தண்டனையை அனுபவிக்காமல் வாழ்நாள் முழுக்க பெயலில் வெளியே சுதந்திரமாக இருக்கலாம். கோடிக் கணக்கில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் மேல் அப்படி ஒரு கரிசனம்.


N.Purushothaman
ஆக 09, 2024 15:01

டெல்லி முதல்வர் இன்னமும் சிறைப்பறவையாக உள்ளார் .....


Sridhar
ஆக 09, 2024 13:25

பாக்கி எல்லா நீதிபதிகளுக்கும் ஒன்னும் தெரியாது ஆனா supreme கோர்ட் நீதிபதிகளுக்குத்தான் எல்லா தர்மமும் நியாயமும் தெரியும். கேட்டா பெயில்தான் முதன்மை ஜெயில் அசாதாரணமான கேசுகளுக்குத்தான் என்பார்கள். அப்போ ஏன் இதற்க்கு முன் கேட்டபோது கொடுக்கவில்லைனு நாம கேட்கக்கூடாது. அப்புறம் அவர் ஒன்னும் தப்பி ஓடிவிடமாட்டார் ம்பாங்க. நமக்கு ஏன்யா இது ஒன்றை வருசத்துக்கு முன்பே தெரியலயான்னு கேட்கத்தோணும் ஆனா கேட்கக்கூடாது. ஒரு ஆளு மக்கள் பணத்தை கோடி கோடியா ஆட்டைய போட்டிருக்கான், அதை உடனே நிரூபிச்சு தண்டனை கொடுக்க அரசு இயந்திரங்களும் தயாராக இல்லை, கோர்டுகளும் எப்படி செயல்படுதுன்னும் தெரியல. இதுல கொடும என்னென்னா ஜாமீன் கெடைச்சவுடனே எதோ நிரபராதின்னு தீர்ப்பு வந்ததுபோல ஒருசாரார் கொண்டாடுவானுங்க. அரசு தரப்புல கொஞ்சம் கொஞ்சமா மந்தமாகி அந்த கேசு இருக்கற இடம் தெரியாமல் போயி நிக்கும். இப்போ பாத்தா, சோனியா வும் ராகுலும் குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே சுத்திட்டுருக்காங்கனு சொன்னா ஒருபய நம்பமாட்டான். அந்த அளவுக்கு பழைய விசயங்கள் மறந்து போய்விடும். ஹ்ம்ம்.. மக்கள்தான் பாவம்


nv
ஆக 09, 2024 12:36

அது எப்படி இந்த அரசியல்வாதிகள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது விடுகிறது??


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை