உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாதாட எடுத்துக் கொள்ளும் நேரத்தை முதல் நாளே தெரிவிக்கணும்; வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

வாதாட எடுத்துக் கொள்ளும் நேரத்தை முதல் நாளே தெரிவிக்கணும்; வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

நமது டில்லி நிருபர் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாளுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:* மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு முன் தெரிவிக்க வேண்டும்.* எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே ஒரு நாள் முன்னதாக நீதிமன்றத்தின் ஆன்லைன் ஆஜராதல் சீட்டு போர்டல் மூலம் தெரிவிக்க வேண்டும்.* அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடித்து தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும்.* அமர்வுகள் நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிடவும், ஒவ்வொரு நாளும் அதிகமான வழக்குகள் திறம்பட விசாரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உதவும்.* எழுத்துப்பூர்வ பதில்கள் சமர்ப்பிப்பை, திட்டமிடப்பட்ட விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.எதிர் தரப்பினருக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
டிச 30, 2025 20:43

நேரடியாக வழக்கின் விபரம்.அது தொடர்பான வாய்மொழி விளக்கம் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது நல்லது என்று சொல்லுகிறது சுப்ரீம் கோர்ட்... திராவிட கும்பலை போல அடுக்கு மொழி அலங்காரம், அர்த்தமே இல்லாமல் ஐந்து மணிநேரம் அண்ணாதுரையை போல பேசி வழக்கின் போக்கை குழப்பி குட்டையில் மீன் பிடிக்கும் குதர்க்க வேலை வேண்டாம் என்கிறது.... வில்சன் கபில் சிபில் போன்ற வக்கீல் பெருமக்களுக்கான சிறப்பு அறிவுறுத்தல் இது......


Gajageswari
டிச 30, 2025 18:39

நீதிமன்ற அதிகாரிகள் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்த வேண்டும்


Narasimhan
டிச 30, 2025 18:37

இதை ஒருநாள் முன்னால் சொன்னால் என்ன மறுநாள் சொன்னால் என்ன.


Sudha
டிச 30, 2025 18:23

இதெல்லாம் தேவையா? 3026ல் பார்த்துக் கொள்ளலாமே? கபில் பசி போன்றோரை அவமானபடுத்தலாமா?


GMM
டிச 30, 2025 17:47

வாதாடும் நேரம் 5 நிமிடம் என்று மன்றம் நிர்ணயிக்கலாம். எழுத்துப்பூர்வ பதில்கள் 3 நாட்களுக்கு முன் வாதி, பிரதி வாதி சம்பந்தம் உள்ள அரசு அதிகாரிகள் இமெயில் முகவரி கொடுத்தால் அனுப்பலாம். விவரம் தெரியாமல் அதிக வாய்தா வாங்குகின்றனர். சிவில் வழக்கில் மக்கள் அதிக நேரம், பணம் இழக்கின்றனர். நேரடி பதில் மூலம் நீதிமன்றம் அதிக விவரம் பெற முடியும். விரைவில் தீர்வு காண முடியும்.


Ramalingam Shanmugam
டிச 30, 2025 17:43

அப்புடியே எவ்ளோ நாள் இழுத்தடிப்பார்கள் என்றும் தெரிவிக்கவேண்டும்


Selvaraj
டிச 30, 2025 17:34

நோக்கம் நல்லதுதான். ஆனால் வழக்கறிஞர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்து விட ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் வாய்தா மாதிரி நீண்டு கொண்டே போகலாம்..?


மேலும் செய்திகள்