உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி மேற்கொள்வது என்பது தேர்தல் கமிஷனின் தனியுரிமை எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட் அதில் தலையிட மறுத்துவிட்டது.பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி குறித்த வழக்க உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறதுவிசாரணையின்போது நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி நடத்துவது என்பது தேர்தல் கமிஷனின் வரம்புக்குள் வருகிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் போது அதில் நீதிமன்றம் தலையிடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேர்தல் கமிஷனின் கடமை. அனைத்தையும் ஏன் நீதிமன்றம் கையில் எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். தேர்தல் கமிஷனுக்கு சொந்தமாக விதிமுறைகள் உள்ளன. அதன்படி செய்யட்டும்.எங்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து முறையீடு செய்ய விரும்புகிறோம். ஆனால் உத்தரவு கிடைக்கவில்லை எனக்கூறும் 100 பேரின் பட்டியலை மனுதாரர்கள் வழங்க முடியுமா? இதனை யாருக்காக செய்கிறோம். மக்கள் ஏன் முன்வரவில்லை என்பதே தற்போதைய கேள்வி எனக்கூறினார். மேலும் இந்த வழக்கை அக்.,09ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Iyer
அக் 07, 2025 21:37

இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டதே - SC செய்த மாபெரும் தவறு. EC என்பது - அரசியல் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். EC ன் நடவடிக்கைகளில் குறுக்கிட SC க்கு எந்தவித அதிகாரமும் இல்லை.


சிட்டுக்குருவி
அக் 07, 2025 21:33

விடுபட்டவர்கள் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம் என்ற விதி இருக்கும் போது உச்சநீதிமன்றத்தை நாடுவதேன் ?உச்சநீதிமன்றம் இதற்காக செலவிடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் உண்டான செலவை இரட்டிப்பாக அபராதமாக வசூலிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் காலம் மிகவும் அரிது .எவ்வளவோ முக்கிய அவசர வழக்குகளை விசாரிக்க காலம் போதாமலிருக்கும்போது இதுபோன்ற அரசியலுக்காக தொடுக்கப்படும் வெத்திவேட்டான வழக்குகளை சமர்பிக்கும் போதே அபராததுடன் நிராகரிக்கவேண்டும் .மக்கள் வரிப்பணம் செலவிடுவதில் சிக்கனம் தேவை .


மனிதன்
அக் 07, 2025 21:12

உங்கள் நேர்மையையும், பரிசுத்தகமான நிர்வாகத்தையும் பார்த்துத்தான் நாட்டு மக்கள் அனைவரும் பூரித்து போயிருக்கிறார்கள்... நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு உரிமையே ஓட்டுதான்.., அதையும் திருடிக்கொண்டால் மக்கள் என்னதான் செய்வது? இதற்கு எதற்கு தேர்தல்? அதற்கு பதிலாக தேர்தல் ஆணையம்


Anbuselvan
அக் 07, 2025 21:10

அப்படியே தமிழ்நாட்டை முதலில் சேர்த்து வரும் 2026 தேர்தலுக்கு முன்பாக வேலையை முடியுங்க சார்


sankaranarayanan
அக் 07, 2025 20:37

இது அரசியலில் எதிர் காட்சிகள் காழ்ப்புணர்ச்சியினால் செய்யப்பட்ட சதி திட்டம் நிற்காது செல்லாது


rama adhavan
அக் 07, 2025 20:32

நல்ல நெற்றியடி கருத்து. பாதிக்கப்பட்டவர் அல்லவா வரவேண்டும்? இவர்கள் யார்? நல்ல வேலைகளை எல்லாம் தடுக்க வேண்டும். இதுதான் குறிக்கோள் இவர்களுக்கு. இவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து மனுதாரர்களையும் வக்கீலயும் எந்த மனு தாக்கல் செய்யவும் ஒரு 5 வருடம் தடை செய்ய வேண்டும்.


தமிழ்வேள்
அக் 07, 2025 20:30

இதே புத்தி வக்ஃப் மசோதா மீதும், கவர்னர் ஜனாதிபதி அதிகாரம் மீது திராவிட கும்பல் பிரச்சினை கிளப்பிய போதோ, ஆர்ட்டிகிள்370 மீதான அனாவசிய வழக்குகளின் போதோ ஏன் வரவில்லை?


MARUTHU PANDIAR
அக் 07, 2025 20:27

யப்பா பொழைச்சுது நீதி.


புதிய வீடியோ