உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை நான்கு வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.தி.மு.க., துணை பொதுச்செயலர் பொன்முடி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர், 2006 - 11, தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, தன் பெயரிலும், மனைவி விசாலாட்சி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விடுவிப்புஇந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ல் வழக்கில் இருந்து விடுவித்தது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.ஜன., 22க்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய அவகாசம் அளித்தது. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார்.அந்த விசாரணையின் போது, ஜன., 22க்குள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து பொன்முடி மற்றும் அவருடைய மனைவிக்கு விலக்கு அளித்து, கடந்த 12ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, பொன்முடி மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மார்ச் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அவசரம் வேண்டாம்முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''பொன்முடி அமைச்சராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அவருக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என, முறையிட்டார்.இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'அவசரம் வேண்டாம்; மேல்முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கட்டும். அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கப் போவதில்லை' எனக் கூறி இடைக்கால தடை விதிக்க மறுத்தது.அதே நேரம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய அளிக்கப்பட்ட விலக்கை நீட்டித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Godyes
பிப் 05, 2024 02:33

கைல கொஞ்சம்துட்டு சேந்தா போதும் தேனாவெட்டுதானாவரும்


P.Sekaran
ஜன 30, 2024 17:22

சாதரணமான அரசு ஊழியர் அதிகமான சொத்து சேர்த்தால் இதுமாதிரி தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க முடியுமா முடியாது ஜெயிலுக்குதான் போக வேண்டும் அரசியலில் இறங்கி அமைச்சராகிவிட்டால் சேர்த்த பணத்திலிருந்து வக்கீலுக்கு பணம் கொடுத்து தப்பித்துவிடலாம் என்று கனா காண்கின்றனர் இதற்கு நீதிதுறை செவி சாய்க்காது. நீதிபதி சாதாரண கடைநிலை ஊழியர் இரண்டு நாள் சிறையில் இருந்தால் வேலையிலிருந்து நீக்குகின்றனர் இவ்வளவு நாள் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்கிறாரே இதனால் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சர் என்றால் சொத்து சேர்ப்பார்கள் அதை கண்டும் காணாமல் இருங்கள் நீதிமன்றம் உட்பட என்று அரசு சொல்கிறது ஆதலால் அரசில் உள்ள அனைவரும் தாராளமாக கையுட்டுபெற்று வாழுங்கள் என்று சொல்ல வருகிறது. அவரே வாங்கிய காசை திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னவர் எப்படி குற்றவாளி லிஸ்டில் இருந்து தப்பிக்க முடியும். இதையெல்லாம் படித்துகொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம் முட்டாள்கள். அவர்கள் பொழைக்க தெரிந்தவர்கள். காமராஜும் கக்கனும் பொழைக்க தெரியாதவர்கள்


p.seetharaman
ஜன 30, 2024 17:00

போன் முடி இல்லை சாகும்முடி .மக்கள் பணம் தின்றது போதும் விடுங்கடா


duruvasar
ஜன 30, 2024 15:42

பொன்முடி என்ற பெயரை கொலோகியாலாக சொல்வதென்றால் எப்படி சொல்லவேண்டும். ?


duruvasar
ஜன 30, 2024 15:16

செம்மண்ணை பெரியார் மண் என நினைத்து நோண்டி வித்து விட்டார் இந்த வெத்துவேட்டு


Narayanan
ஜன 30, 2024 14:39

நீதி ஏன் இப்படி முட்டிமோதுகிறது?? தண்டனையை ரத்து செய்யமுடியாது .என்கிறது . அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைவதில் கொடுத்த விலக்கை நீட்டிக்கிறதாம் .தண்டனையை கைதுசெய்யமுடியாது நீதிமாற்றத்தில் சரண் அடைந்து சிறை செல்ல உத்திரவிடவேண்டியதுதானே. அவர்களின் தேக ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கு சான்று பொன்முடி திமுக சேலம் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்டம் போட்டது ஊர் அறிந்த விஷயம் . நீதிமன்றம் இப்படி தடுமாறக்கூடாது .


Ramesh Sargam
ஜன 30, 2024 11:15

உச்ச நீதிமன்றமே மறுப்பு தெரிவித்துவிட்டது. இனி என்ன செய்யவேண்டும்? பொன்முடிக்கு நெஞ்சு வலி வந்தால், எப்படி 'நடிக்க' வேண்டும் என்று சொல்லித்தரவேண்டும், கைதிலிருந்து தப்பிக்க...


ponssasi
ஜன 30, 2024 13:56

நீதிமன்றங்களும், மக்களும் அரசியல்வாதிகளின் நெஞ்சுவலி ......வலி எல்லாம் கேட்டு பழகிப்போச்சி, ஸ்ட்ரைட்டா அரஸ்ட்தான்


தமிழ்வேள்
ஜன 30, 2024 10:55

திமுகவின் ஜோதி ஊர்வலத்தில் கோஷம் போட முடிகிறது ... வாழப்பாடி மாநாட்டில் ஆவேசமாக சவுண்டு விட்டு கூவ முடியுது .அனால் இவனுக்கு சிறைக்கு செல்ல முடியாதாம் ,..வியாதியாம் ..யாரிடம் காதுகுத்துகிறான் ? உடனடியாக சிறையில் அடைக்கவேண்டும்...


ponssasi
ஜன 30, 2024 13:57

குத்தாட்டத்தை விட்டுடீங்க ........ என்னா டான்ஸ்


hariharan
ஜன 30, 2024 10:20

ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஒரு பொய் வழக்கில் சிறையில் இருக்கும் பொழுது, பாராளுமன்றத் தேர்தலில் முஸாபர்பூர் தொகுதியில் அவருடைய தாயார் பிரச்சாரம் செய்தார், அவருக்கு ஹிந்தி தெரியாது, கர்நாடகாவை சேர்ந்தவர். ஃபெர்னான்டஸ் சார்பாக தேர்தலில் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்தவர் ஸ்வராஜ் கொளஷல் (ஸுஷ்மா ஸ்வராஜின் கணவர்). இதே தொகுதியில் 4 முறை வென்றவர். அது போல சிறையிலிருந்தே தேர்தலை சந்திக்க வேண்டியது தானே திறமிருந்தால். ஆனால் இவரைப்போன்ற அல்லக்கைகளோடு ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற மாமனிதர்ககளோடு ஒப்பிடக்கூடாது. இவரெல்லாம் ...


ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:24

பெர்னாண்டஸ் தண்டிக்கப்பட வில்லை. ஊழல் வழக்கில்லை????.


Vivekanandan Mahalingam
ஜன 30, 2024 14:03

ஆமாம் குண்டு வெடித்த வழக்கு என ஞாபகம்


Kalyanaraman
ஜன 30, 2024 09:07

நமது சட்டம்‍, நீதிமன்றங்கள் மீது குற்றவாளிகளுக்கு உள்ள நம்பிக்கை பொதுமக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை