உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

வக்ப் சட்டத்திருத்த மசோதாவை நாடு முழுதும் அமல்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து, வழக்குகளை முடித்து வைத்தது. நாடு முழுதும் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் வழங்கும் நிலம், சொத்துகளை வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது. இந்த நிர்வாகத்தை சீரமைக்க, 1995ம் ஆண்டின் வக்ப் சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, பார்லி.,யில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திருத்த மசோதா பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் கடந்த ஏப்ரலில் சட்டமானது. இதை எதிர்த்து காங்., தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வக்ப் சட்டத் திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேநேரம் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதன் விபரம்: * வக்ப் வாரியத்துக்கு சொத்துகளை தானமாக வழங்க முன்வரும் நபர், 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நிறுத்தி வைக்கிறோம். மாநில அரசுகளும் இதற்கான விதிகளை உருவாக்கும் வரை இந்த சட்டப் பிரிவு நிறுத்தப்படுகிறது. * வக்ப் வாரிய சொத்து விசாரணை ஷரத்துகளில் ஒரு பிரிவை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். அதாவது, வக்ப் வாரிய சொத்துகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக வைத்து எந்தவொரு சொத்து ஆவணங்களையும் திருத்தக் கூடாது. *ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்ப் சொத்து மீது, தீர்ப்பாயம் முடிவெடுக்கும் வரை, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. *அதே சமயம் அந்த சொத்து தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிக்கிறோம். * மத்திய வக்ப் கவுன்சிலின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சமாக 4 பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம். * 11 பேர் கொண்ட மாநில வக்ப் வாரியங்களில் அதிகபட்சமாக 3 பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கலாம். வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக முடிந்தவரை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்கலாம் என கருதுகிறோம்.இந்த உத்தரவுகள் அனைத்தும் இடைக்காலமாக பிறப்பிக்கப்படுகிறது. மேலும், இந்த உத்தரவு திருத்தப்பட்ட ஷரத்துகளின் அரசியலமைப்பு தன்மையை நிச்சயம் பாதிக்காது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பும் வரவேற்பு:யாருக்கு சாதகம்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் வலிமை, நமது அமைப்புகள் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள விதிகள் குறித்து அரசு ஆராயும்,” என்றார். காங்.,பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ், ''இந்த உத்தரவு வாயிலாக வக்பு விவகாரத்தில், கலெக்டர்களின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வக்பு சொத்துகளை சந்தேகத்திற்குரிய சவால்களில் இருந்து பாதுகாத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தின் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு கிடைத்த வெற்றி,'' என்றார். 'சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப் படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது ' என, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பாராட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின், 'இஸ்லாமியர் மத உரிமை, அடிப்படை உரிமை, அரசியலமைப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை தீர்ப்பு வலுப்படுத்துகிறது' என, தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.,வும், வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என இரு தரப்புகளுமே வரவேற்றுள்ளன. 'வக்பு சட்டத்தில், முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
செப் 16, 2025 21:03

பார்த்தது எல்லாம் என்னுடைய சொத்து என்று கொள்ளை அடிக்க நினைத்த கூட்டங்களின் கனவு கலைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்து, 1995 முதல் இந்த நாட்டு அப்பாவிகளின் சொத்தை, அரசாங்க சொத்தை வோட்டு வங்கிக்காக கொள்ளை அடிக்க வைத்த அரசியல் கூட்டத்தை பற்றி என்ன சொல்வது


spr
செப் 16, 2025 17:28

எதிரிக் கட்சிகள் "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே" என்று சொல்லி சமாளித்துக் கொள்கின்றன. ஒட்டகம் வெற்றிகரமாக கூடாரத்துக்குள் நுழைந்து விட்டது. மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வழக்கு எதிரிகளுக்குச் சாதகமாக முடிந்திருந்தால், தமிழக இந்து அற நிலையத்துறையை கலைக்க வேண்டுமென யாரேனுமொரு "வட நாட்டார்" தமிழகத்தில் சு சுவாமியைத் தவிர வேறு எவரும் செய்ய வாய்ப்பில்லை வழக்கு பதிந்திருப்பார். அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


Tamilan
செப் 16, 2025 16:10

கொள்ளையடிக்கும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டது


SUBBU,MADURAI
செப் 16, 2025 20:00

இந்துக்களின் சொத்தை கொள்ளையடிப்பது உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் தடுக்கப் பட்டிருக்கிறது.


சிந்தனை
செப் 16, 2025 15:17

ஏற்கனவே பாகிஸ்தானை பங்களாதேஷை ஆப்கானிஸ்தானை பிரித்துக் கொடுத்தது போதாதா இன்னுமும் பிடுங்க வேண்டுமா முஸ்லிம் நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறதா இது போல


ஆரூர் ரங்
செப் 16, 2025 11:59

மைனாரிட்டி அறிக்கை: மார்ச் 6, 1962 ஈவெரா எழுதியது...மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். (மேலும்).அன்றே சொன்னார்.நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம்.மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்”


ஆரூர் ரங்
செப் 16, 2025 11:55

ஸ்டாலின் வக்ஃபு போர்டில் இடம் பெறத் தகுதியுடையவர்.


Ajay India south
செப் 16, 2025 11:34

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி நிலைநிறுத்தப்படும் இதனால்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 16, 2025 10:55

நீதிபதிகள் மிகவும் புத்திசாலிகள். இப்படி தீர்ப்பளித்தால் அவனுக்காது அப்படி தீர்ப்பளித்தால் இவனுக்காகது. ஏன் இருவரையும் பகைத்து கொள்ள வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக ஒரு தீர்ப்பளித்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.


ManiK
செப் 16, 2025 10:41

ஸ்டாலின் மேல் கோர்ட் அவதூறு வழக்கை தொடரவேண்டும். தலைமை பதவியில் இருப்பவர்கள் பொருப்புடன் உண்மையை கூறவேண்டும். மக்களை திசைதிருப்ப பொய்யான தகவலை பரப்புவது சி.எம். ஆனாலும் குற்றமே.


Ramaraj P
செப் 16, 2025 06:57

வக்பு போர்டின் உறுப்பினராக அரைமணி நேரத்திற்கு முன் முஸ்லிம் ஆக மாறி இருந்தாலே போதும் அல்லவா!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை