உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் அதிகாரிகள் கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம்

உயர் அதிகாரிகள் கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பணி இடங்களில் உயர் அதிகாரிகளின் கண்டிப்பு, கிரிமினல் குற்றமல்ல' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அறிவுசார் குறைபாடு உடையோரின் மேம்பாட்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது, பெண் உதவி பேராசிரியை ஒருவர், 2022ல் வழக்கு தொடர்ந்தார்.தன்னை, உயரதிகாரிகள் உள்நோக்கத்துடன் அவமதிப்பதாகவும், திட்டியதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், இயக்குநர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:பணி இடங்களில் மூத்தவர்கள் கண்டிப்பதை உள்நோக்கத்துடன் அவமதிப்பதாக கருத முடியாது; அது கிரிமினல் குற்றமல்ல. இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதித்தால், பணி இடங்களின் அமைதியான சூழலானது, ஒட்டுமொத்தமாக சீரழிந்து விடும்.சீனியர்களின் அறிவுரையானது, பணி இடத்தில் ஒழுக்கம், கடமைகளை செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது. தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள், கடமையை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்பது, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. இந்த வழக்கு வெறும் யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 504, தற்போது புதிய 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தின் 352வது பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி உள்நோக்கத்துடன் ஒருவரை அவமதிப்பது குற்றம்; அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Arachi
பிப் 17, 2025 19:10

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை புரிந்து நிறைவாக செயல்படவேண்டும். தாமதமாக அல்லது புரியாமல் செயல்பட்டால் அரசுக்கு கெட்ட பெயர் வரும். எனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சரியே. அரசு ஊழியர்கள் என்றுதான் அழைப்பார்கள் அரசு ஊழியர்கள் அரசு முதலாளிகள் அல்ல.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 08:18

ஊழியர்களை கண்டிப்பதுடன் கடுமையாக தண்டிப்பதையும் அதிகாரர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது அரசு இயந்திரம் வேலை செய்யும். இல்லையெனில் எல்லாவற்றும் லஞ்சம் கொடு என்ற பதிலுடன் ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள்.


Kasimani Baskaran
பிப் 17, 2025 07:29

குற்றம் செய்ய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றால் கூட பரவாயில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது.


KRISHNAN R
பிப் 17, 2025 07:26

அப்படியே... அதிகாரி மீது பொய்,வன்முறை சம்பவங்கள் குறித்தும் சொல்லி இருக்கலாம். ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால் தவறு என்று சொல்வார்கள்


D.Ambujavalli
பிப் 17, 2025 06:27

மேலதிகாரிகள் சும்மா கண்டிப்பதைத் தாண்டி தங்கள் சட்டம், மீறிய செயல்களுக்குத் துணை போகவில்லை என்ற காரணத்தால் CR இல் தவறாக எழுதுவது, பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடுவது என்று கூடச் செல்வார்கள். திட்டுவது என்பது பயமுறுத்துவது என்ற எல்லைக்குக்கூடப் போயிருக்கலாம் நீதிமன்றத்தை நாட வேண்டுமென்றால் serous ஆக இருந்திருக்கலாம்


R S BALA
பிப் 17, 2025 07:32

அதற்குத்தான் ஆதாரங்கள் வலுவாக இருக்கவேண்டும் என்பது.. அதனால்தான் நீதிபதி யூகத்தின் அடிப்படை என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை