உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையம், எஸ்.ஐ.டி., செயல்பாடு சஸ்பெண்ட்: சுப்ரீம் கோர்ட்

கரூர் சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையம், எஸ்.ஐ.டி., செயல்பாடு சஸ்பெண்ட்: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், சிறப்பு விசாரணைக்குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் செயல்பாடு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் விசாரணைக்குழுவை அமைத்து இருந்தது. மேலும், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இருந்தது. இக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துவக்கினர்.இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று காலை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்கோகி தலைமையில் குழு அமைத்துள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விபரம் தற்போது வெளியாகி உள்ளது.அதில், 1. கடந்த 27.09.2025 கரூர் நகர போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் 855/2025 ஐ சிபிஐக்கு மாற்றப்படுகிறது.2. சிபிஐ இயக்குநர், இந்த வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். அவருக்கு உதவ வேறு சில அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.3. கரூர் எஸ்பி, கரூர் நகர போலீசார், சென்னை ஐகோர்ட் நீதிபதி அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் முதல்வர் அமைத்த விசாரணை கமிஷன் ஆகியோர் தங்களிடம் உள்ள வழக்கு, அது தொடர்பான ஆவணங்கள், தற்போது வரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் (டிஜிட்டல் உள்ளிட்ட எந்த வடிவில் இருந்தாலும்) ஆகியவற்றை உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.4. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதால், சிறப்பு புலனாய்வு பிரிவு அல்லது ஒரு நபர் விசாரணை கமிஷன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. 5. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு தமிழக அரசு தேவையான உதவிகள் மற்றும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்கோகி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் ஐஜி அந்தஸ்திற்கு குறையாத தமிழக கேடரை சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. இந்த குழுவின் செயல்பாடுகள்1. சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணையை கண்காணிப்பதுடன், விசாரணைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பது.2. சிபிஐ விசாரணையை கண்காணிப்பது3. சிபிஐ சேகரிக்கும் ஆதாரங்களை உடனுக்குடன் ஆய்வு செய்ய இக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.4. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நேர்மையாக, வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய இந்த குழுவினர், எந்த விஷயம் தொடர்பாகவும் விசாரிக்கலாம்.5. முன்னாள் நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் விதிமுறைகளை இக்குழு வகுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V K
அக் 13, 2025 21:54

ஒரு தவறு செய்தற்கு மேலும் மேலும் தவறு செய்த திமுக மற்றும் அரசு பதற்றம் பதற்றம் வாதாடுதல் சம்மதம் சம்மதம் இல்லாமல் வாதாடுதல் நீதிபதிக்கு ரொம்பவே எளிதாக போய்விட்டது


T.sthivinayagam
அக் 13, 2025 21:34

இந்த நீதிபதி வேண்டாம் அந்த நீதிபதி வேண்டும், நீதி என்பது நீதிபதிகாளால் மாறுபடுகிறாதா, நீதி இந்திய ஜனநாயக நாட்டில் தான் உள்ளதா , மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று கூறுகிறார்கள்.


Murugesan
அக் 13, 2025 21:11

பழைய புரட்சித்தலைவர் பாடல் பணம் பதவி ஆணவத்தில் நானல் போல சட்டத்தை வளைத்து தாங்கள் செய்த தில்லு முல்லுகளை மறைக்க முயன்ற தி மு கழகமும்,திமுக கிளை அமைப்பான தமிழக ஏவல்துறையும் அழியும் காலம் வரும் ,மக்களின் வரிப்பணத்தில் வாழுகின்ற காவல்துறை அயோக்கியதனம் கொண்டநதுறையாக ,அதர்மத்தை கடை பிடித்து வாழும் இவனுங்க குடும்பம் உருப்படாது


ராமகிருஷ்ணன்
அக் 13, 2025 21:10

விடியல் அரசின் விசாரணை கமிஷனை தூக்கி எறிந்து விட்டது உச்ச நீதிமன்றம். இதுவே எதிர் கட்சிகளுக்கு பாதி வெற்றி. தேர்தலில் கொலைகார கூட்டணி என்று பேசி பேசி திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்


spr
அக் 13, 2025 20:38

அடுத்து தா வெ க தலைவர் கரூர் மக்களைச் நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது அப்படியாயின் அந்த சந்திப்பு, கரூர் எல்லைக்குட்பட்ட தான்தோன்றி மலை பிரச்சினைக்குரிய அமைச்சர் பகுதி என்றாலும் அல்லது சுக்காலியூர் பகுதியில் ஏதேனுமொரு பரந்த வெளியில், பகல் பொழுதில் மட்டுமே நடத்த அனுமதிக்கலாம் அங்கு சாலை வசதி சிறப்பாகவே இருக்கும் அருகாமையில் நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது எனவே கூட்டம் பிரச்சினையில்லாமல் நடக்கும் அந்தப் பகுதியில் தக்க மருத்துவ வசதி, குடிநீர் வசதி அனைத்தும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும். அதற்காகும் செலவை த வெ க ஏற்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் நடக்க விட மாட்டார்கள் என்றாலும் அந்த நிபந்தனை ஏற்கப்படாவிடில் அனுமதி மறுக்கப்பட வேண்டும்


நிவேதா
அக் 13, 2025 19:56

குளறுபடியான இடைக்கால தீர்ப்பு. ஒரு நபர் ஆணையம் மற்றும் எஸ். ஐ . டி செயல்பாடுகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு, சிபிஐ இடைக்காலமாக, முழுத்தீர்ப்பு வரும்வரை, வழக்கை விசாரிப்பதால் என்ன உபயோகம்? முழு தீர்ப்பாகவே வழங்கி இருக்கலாம்


SUBBU,MADURAI
அக் 13, 2025 19:50

இவர்களுடன் திமுகவின் நீதிபதிகள் அணியின் அநீதிமான்களையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஏனென்றால் இவர்கள் வழக்கின் விசாரனையை சரியான கோணத்திற்கு அழைத்து செல்ல உதவுவார்கள்! அந்த வகையில் இந்த வழக்கில் இவர்களை சேர்க்காதது தமிழகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாகும்!


RK
அக் 13, 2025 19:44

மக்களை கொன்று அரசியல் செய்யும் திராவிட கட்சிகளுக்கு மக்கள் செம்மட்டி அடி தரப்போகிறார்கள். விஜய் கட்சி மக்களுக்கு மேலும் வலுவாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதிமுக பிஜேபி கட்சிகளுடன் இணைந்து திருடர்களை சிறையில் அடைக்கும் நாள் மிக விரைவில்.


நிவேதா
அக் 13, 2025 21:05

முதலில் உங்க சிங்கத்தை வீட்டை விட்டு வெளியே வர சொல்லுங்க


balaji
அக் 13, 2025 19:40

a clear set back to "state union" government.. unnecessary earlier formation of one man commission leading to waste of time


Kjp
அக் 13, 2025 21:44

அண்ட் வேஸ்ட் ஆப் மணி.


Anbuselvan
அக் 13, 2025 19:33

அப்படியே அது என்ன எதிர் கட்சி கூட்டங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வண்டி நுழைகிறது என்பதை குறிப்பாக சிறப்பு விசாரணை நடத்துமாறு கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


சமீபத்திய செய்தி