உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எவ்வளவு நாள்தான் இலவசம் தருவீர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்: ரேஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

எவ்வளவு நாள்தான் இலவசம் தருவீர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்: ரேஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி : 'இன்னும் எவ்வளவு நாள்தான் இலவச ரேஷன் தருவீர்கள். அதற்கு பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்' என, புலம்பெயர்ந்தோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

80 கோடி மக்கள்

கொரோனா பரவல் காலத்தின்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் கிடைப்பது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.அப்போது, நாட்டின் எந்த இடத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கும் வசதியை ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்படுகிறது,” என, குறிப்பிட்டார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், “இருப்பினும், 2 - - 3 கோடி மக்களுக்கு இதுவரை ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை,” என, வாதிட்டார்.இதைத் தொடர்ந்து அமர்வு கூறியதாவது:இன்னும் எத்தனை காலத்துக்குதான் இலவச ரேஷன் பொருட்களை வழங்குவீர்கள். அதற்கு மாற்றாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு கவனம்

இந்தளவுக்கு அதிகமான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டால், மாநில அரசுகள் ரேஷன் அட்டைகளை தொடர்ந்து வினியோகிக்கும். ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்குகிறது என்பதால், மாநில அரசுகள் இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளன.இதையே, மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறினால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை கூறுவர். அதிகளவு ரேஷன் கார்டுகளை வினியோகிப்பதால், இலவச ரேஷனையும் மாநிலங்களே வழங்க வேண்டும் என்று உத்தரவிடலாமா?இதனால், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Sankaran Kumar
டிச 13, 2024 17:34

It is very unfortunate that most people are selling their ration and those who are really need of ration to feed their family are not getting enough. Vote bank politics is a curse for the nation and it considerably affecting the development and employment. Nowadays most hotels are busy in week days too and people spend money lavishly there. If we take survey from the people who are visiting hotels, 90% of them are getting ration items from government.


S.jayaram
டிச 12, 2024 04:43

அய்யா நீதிபதிகளின் கருத்துக்கள் சரியே ஆனாலும் இதில் நிறைய குளறுபடிகள் உள்ளன இலவசங்களால் நாட்டிற்க்கு இழப்புகள் அதிகம் இதை சேமித்தால் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் ரேஷன் கார்டுகளை அவசர காலங்களிலும், வறட்சியினால் பாதிக்கப்படும் காலங்களில் மட்டும் பயன் படுத்தவேண்டும். இந்த இலவசங்களால் சோம்பேறிகள் அதிகம் உருவாகின்றனர், இப்போ தமிழ்நாட்டில் பலதுறைகளில் நஸ்டத்தில் இயங்குவதாக அரசுகள் அறிவிக்கின்றன ஆனால் அவைகள் வருடத்திற்கு பல்லாயிரம் கோடி இலவசதிற்க்காக செலவழிக்கின்றன இதன் மூலம் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயங்களை அடைகின்றன, கேட்டால் கொள்கை முடிவு என்கின்றனர், இதன் விளைவு கடன் வாங்குகின்றனர் கேட்டால் GDP தகுதியில் கடன் வாங்குகிறோம் என்கின்றனர் இதை யார் அடைப்பது நீதிமன்றங்கள் கேள்வி கேட்பதில்லை.


அப்பாவி
டிச 11, 2024 17:18

சீக்கிரமே ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜட்ஜ் வேலைகளை காலிபண்ணுவாங்க.


அப்பாவி
டிச 11, 2024 16:17

2047க்குள்ளாற ரேசன் கார்டையும் ஒழிச்சி வல்லரசாயிடுவோம் யுவர் ஆனர்.


Mohan Loganathan
டிச 11, 2024 16:16

மிஷின்கள் பயன்பாட்டினால் கைகளால் வேலை செய்வோருக்கு வேலை இல்லை இது தான் வேலையில்லா நிலமைக்கு காரணம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை பட்டம் படித்தவர்கள் அலுவலக வேலை கேட்கிறார்கள் அங்கே டிஜிட்டல் இந்தியா வேலை செய்கிறது..


Ravi Kulasekaran
டிச 11, 2024 14:33

ரேஷன் கார்டு வழங்கவதை கட்டுபடுத்த வேண்டும் நாலு பேர் உள்ள திருமணம் ஆனவுடன் 3 அல்லது நான்கு அட்டவணைகளாக ஏமாற்றி ரேஷன் பொருட்கள் வாங்கி கேரளாவுக்கு கடத்த படுகிறது


ஆரூர் ரங்
டிச 11, 2024 12:40

ஏழைகளாக பட்டினியென்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்த பரம்பரை நீதிபதிகளுக்கு விலையில்லா தானிய அளிப்பின் முக்கியத்துவம் புரியாது. பெருகிவரும் மக்கள் தொகைக்கும் அரசே வேலைவாய்ப்பினை உருவாக்குவது கடினம். மூன்றில் ஒருவராவது முத்ரா கடனால் பலன் பெறுகிறார். மற்றவர்கள் பருவ நிலை மாற்றத்தால் விவசாயத்தை முழுமையாக நம்பியிருக்க இயலவில்லை. பட்டினிச் சாவுகளுக்கு உடனடி தீர்வு தானிய விநியோகம்தான்.


sugumar s
டிச 11, 2024 11:39

DM does not have sufficient skilled people to do development. they only have people to swindle. hence all these explanations are useless. so long as people come out of the culture of 1000s, quarter and biriyani they also dont have any rights to ask for social welfare


jayvee
டிச 11, 2024 11:07

மாதா மாதம் இரண்டியிராம் மூவாயிரம் என்று வாரி வழங்கும் மாநில அரசுகளை பற்றி கணங்களுக்கு தெரியாது போல ..


KRISHNAN R
டிச 11, 2024 10:47

உணவுக்காக. ரேசன் வழங்கலாம்.. பிற இலவசம் எல்லாம் வாக்கு வங்கி, ஊழல்... என்பதில் பங்கு ஆகும்


சமீபத்திய செய்தி