உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிவு எடுக்க காலக்கெடு: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி குறித்து ஜூலை 22ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

முடிவு எடுக்க காலக்கெடு: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி குறித்து ஜூலை 22ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

புதுடில்லி: மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் தொடர்பாக வரும் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.தமிழக சட்டசபையில் தி.மு.க., அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார். வேண்டுமென்றே கவர்னர் இழுத்தடிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கடந்த ஏப்., 08 ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மகாதேவன் அமர்வு, மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர். இந்தத் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது.இதனை தொடர்ந்து அரசியல்சாசனத்தின் 143(1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி கோர்ட்டிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார். இதன்படி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக 14 கேள்விகளை திரவுபதி முர்மு கேட்டுள்ளார்.ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்1) ஒரு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?2) அந்த வாய்ப்புகளை பயன்படுத்த, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?3) இந்த பிரிவின்கீழ், கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?5) அரசியல் சாசனம் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காத நிலையில் கோர்ட் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?6) 201வது பிரிவின்படி, மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு உள்ள தனி உரிமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?7) அரசியல் சாசனத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் அவ்வாறு நிர்ணயிக்க முடியுமா?8) கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்போது, தனக்குள்ள அதிகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி ஆலோசனை பெற வேண்டுமா?9) பிரிவு 200ன் கீழ் கவர்னரும், 201ன் கீழ் ஜனாதிபதியும் முடிவு எடுப்பதற்கு முன்பாக, மசோதா சட்டமாகுமா? சட்டமாகாத மசோதாவில் உள்ளது பற்றி கோர்ட் விசாரிக்க முடியுமா?10) கவர்னர் அல்லது ஜனாதிபதி வழங்க வேண்டிய உத்தரவுகளை, 142வது பிரிவின்கீழ் வேறு வகையில் கோர்ட் பிறப்பிக்க முடியுமா?11) சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னர் ஒப்புதல் தராமலேயே சட்டமாக அமல்படுத்த முடியுமா?12) ஒரு வழக்கில்,அரசியலமைப்பு சட்டம் தொடர்பான கேள்வி எழும்போது, அச்சட்டத்தின் 145 (3) பிரிவின்படி, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது கட்டாயமா?13) பிரிவு 142ன் படி, அமலில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்க வழி இருக்கிறதா?14) மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரத்தில், 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்பை எந்த வகையிலாவது அரசியல் சாசனம் தடுக்கிறதா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.இந்நிலையில், குடியரசு கேட்ட விளக்கம் குறித்த வரும் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு எடுக்கிறது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரஷிம்மா மற்றும் ஏஎஸ் சந்துர்கர் அமர்வு இதனை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Barakat Ali
ஜூலை 20, 2025 13:23

ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் ...... தாமதமான விசாரணை ...... சுப்ரீம் கோர்ட்டார் ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ ????


Subburamu Krishnasamy
ஜூலை 20, 2025 09:07

Welcome move. The debate, arguments must be highly neutral in nature. There should not be any ego between the judiciary and elected governments. Modern approach is important. If necessary judiciary may advice governments to modify the constitution suitable for modern world. Scientific approach is important in dealing with the law of the land. Political leaders and judicial peoples must sit together to draw a new India. Bringing amendments to do constitution if necessary may be suggested.by learned judiciary peoples and quality political leaders.


Sathiesh
ஜூலை 20, 2025 07:47

இவங்களுக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே 3 மாதமாகிறது. பிறகு விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்க, பல வருடங்கள் ஆகும் போல. இந்த லட்சணத்தில் இவர்கள் ஜனாதிபதிக்கும், ஆளுனருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கிறார்கள். வெட்கக்கேடு.


c.mohanraj raj
ஜூலை 20, 2025 00:21

தயவுசெய்து ஒரு நான்கு நீதிபதிகளை வீட்டிற்கு அனுப்புங்கள் அனைத்து சரி ஆகும் அத்தனை பேரும் திருந்துவான்


sureshsmart is smart
ஜூலை 19, 2025 23:37

1️⃣ மாநில ஆளுநர் Governor மற்றும் குடியரசுத் தலைவர் President இவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது Article 361 of Indian Constitution. அவர்கள் செயற்பாடுகளுக்காக நீதிமன்றங்களில் அழைக்கப்பட முடியாது. - 2️⃣ மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் Section 197 of CrPC படி, அவர்கள் அதிகாரப் பூர்வ பணிகளை செய்யும் போது நிகழ்ந்த செயல்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அரசாங்கத்தின் முன் அனுமதி prior sanction தேவை. - 3️⃣ நீதிபதிகள் Judges நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அவர்கள் மீது நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது. நீதித்துறையின் அங்கீகாரம் அல்லது பாதுகாப்பு பெற வேண்டும். - 4️⃣ மெயில்காவலர் Soldiers, ஆயுதப்படை ஊழியர்கள் Section 45 of CrPC மற்றும் பிற சிறப்பு சட்டங்கள் Ex: AFSPA மூலம், அரசு அதிகாரிகள் அல்லது ராணுவத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய முன் மத்திய அல்லது மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். - 5️⃣ மத்திய புலனாய்வுத்துறை CBI அதிகாரிகள் Delhi Special Police Establishment Act மற்றும் Section 197 CrPC ஆகியவற்றின் கீழ், அதிகாரப் பூர்வ செயல்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன் அனுமதி தேவை.


சுந்தர்
ஜூலை 19, 2025 23:01

இப்ப இந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் தரவில்லை. இவ்வளவு நாட்களா ஆகிறது பதில் தர? ஒரு கேள்விக்கு ஒரு நாள் எடுத்துக் கொண்டால் கூட இந்நேரம் பதில் அளித்திருக்கலாமே...


Iyer
ஜூலை 19, 2025 22:05

 மாண்பிமிகு ஜனாதிபதி அவர்கள் "சட்டம் சம்பந்த 14 கேளிவிகளை" எழுப்பி 72 நாட்கள் ஆகிவிட்டன.  இப்போதுதான் நமது நீதிபதிகளுக்கு இதுபற்றி விசாரணை செய்ய சமயம் கிடைத்ததா?  விசாரணை என்ற பெயரில் இன்னும் எத்தனை நாட்களை வீணடிக்கப்போகிறார்கள் ?  இந்த லக்ஷணத்தில் ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் ADVICE


Iyer
ஜூலை 19, 2025 21:56

 வருடங்கள் கணக்கில் வழக்குகள் தீர்வு ஆகாமல் PENDING ல் வைத்துள்ளார்கள் நமது நீதிபதிகள்  HCs, SC யில் தேர்தெடுக்கப்டும் நீதிபதிகள் வெளிப்படையான முறையில் இல்லை  இந்திய அரசியல்வாதிகளை விட மோசமான NEPOTISM நீதித்துறையில் உள்ளது.  ஊழலில் - நிஜமாகவே - நமது அரசியல்வாதிகளை தோற்கடித்துவிட்டார்கள் நீதிபதிகள்  ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையாவது குற்றப்பத்திரிகை செய்யமுடியும். ஆனால் இந்த அ நீதிபர்களின் மேல் கை வைக்க முடியாது  இவர்களுக்கு நமது ஜனாபதியின் கடமை பற்றி கேள்வி எழுப்ப என்ன தார்மீக உரிமை ?


பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 21:50

நாட்டின் ஜனாதிபதிக்கு முடிவு எடுக்க ஒரு மாதம் காலக்கெடு..... ஆனால் இவர்கள் ஒரு வழக்கை முடிக்க எந்த காலக்கெடுவும் இல்லை.... குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடிக்காத நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்..... அதற்க்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.... அது நாட்டிற்கு அவசியமும் கூட.... 140 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீதே வழக்கு பதிய முடிகிறது.... ஆனால் சாதாரண நீதிபதி தவறு செய்தாலும்.... அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.... அவ்வளவு ஏன் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை...சட்டம் அனைவருக்கும் சமம் என்று யார் சொன்னது ???


தஞ்சை மன்னர்
ஜூலை 19, 2025 21:18

ஆட்சி அமைத்த கும்பல் அதே யுக்தியை தெற்க்கே பாய்ச்ச முயற்சிக்கிங்கிறது """


சமீபத்திய செய்தி