மேலும் செய்திகள்
ரூ.2,500 கோடி போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டவர் கைது
33 minutes ago
'போலீஸ் ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில அரசுகளின் தலைமை செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாடு முழுதும், போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும், 'லாக் அப்' மரணங்கள் தொடர்பான விவகாரத்தை கவனத்தில் எடுத்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின் போது, போலீஸ் ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விபரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, ''11 மாநிலங்கள் மட்டும் தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. மத்திய அரசும், அதன் விசாரணை அமைப்புகளும் சிசிடிவி கேமராக்கள் தொடர்பாக எந்த தகவலையும் அளிக்கவில்லை,'' என்றார்.இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மூன்று வாரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் பிரமாணப் பத்திரத்தை அனைத்து தரப்பும் விரிவாக தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், மாநில அரசுகளின் தலைமை செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, எச்சரித்தனர். வழக்கை, டிச., 16க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -
33 minutes ago