தண்ணீரில் தவறி விழுந்த சுரேஷ், யோகேஸ்வர்
ராம்நகர்; மோட்டார் படகில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ், எம்.எல்.ஏ., யோகேஸ்வர் தண்ணீரில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ராம்நகரின் சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக, வேட்பாளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் கன்வா நீர்தேக்கத்திற்கு துணை முதல்வர் சிவகுமார், யோகேஸ்வர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., சுரேஷ் ஆகியோர் சென்றனர்.சிவகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஒரு படகில் நீர்தேக்கத்திற்குள் சவாரி சென்றனர். சுரேஷும், யோகேஸ்வரும் மோட்டார் படகில் தனியாக சென்றனர். சுரேஷ் படகை ஓட்ட, யோகேஸ்வர் பின்னால் நின்று கொண்டு இருந்தார். அணையை சுற்றி பார்த்துவிட்டு கரையின் அருகே வந்த போது, சுரேஷ் கட்டுப்பாட்டை, மோட்டார் படகு இழந்தது. இதனால் படகில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். ஆனாலும் நீச்சல் அடித்து கரைக்கு வந்து விட்டனர். தண்ணீரில் இருவரும் தவறி விழுந்ததை பார்த்து, கரையில் நின்ற தொண்டர்கள் பதற்றம் அடைந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.