உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.,யை சேர்ந்தவருக்கு ஏற்பட்ட துயரம்

யுடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.,யை சேர்ந்தவருக்கு ஏற்பட்ட துயரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் யுடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்த நபரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பிரபல சமூக வலைதளமான யுடியூப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பார்த்து கல்வி, சமையல் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வருகின்றனர். சிலர் வீடியோ பார்த்து சிகிச்சை செய்யவும் முற்படுகின்றனர். உ.பி.,யின் மதுராவை சேர்ந்த ராஜூ பாபு(32) என்பவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல டாக்டர்களை பார்த்தும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து யுடியூபில் மருத்துவ குறிப்புகளை பார்த்து உள்ளார். அதனை பார்த்து தாமாகவே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, அதற்கு தேவையான மயக்க மருந்து மற்றும் உபகரணங்களை வாங்கி உள்ளார்.நேற்று காலை தனது வீட்டின் அறையில் மயக்க மருந்து செலுத்தி கொண்டு சிகிச்சையை துவக்கினார். ஆனால், சிறிது நேரத்தில் மயக்க மருந்தின் வீரியம் குறைய துவங்கியதும் பயங்கரமாக வலி ஏற்பட துவங்கியது. இதனையடுத்து அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலை மோசமடையவே ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
மார் 21, 2025 04:04

இதென்ன பிரமாதம் ஒரு ஒரு கருவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்தால் முடி உடனே கருகரு என்று வளர்ந்துவிடும் என்று வீடியோ போட்டதில் ஒருவருக்கு 3.2 லட்சம் லாபமாம்.


Senthoora
மார் 21, 2025 02:45

உப்பு படிப்பறிவு அவளவுதான். போலி ஆஸ்பத்திரி, போலி நீதிமன்றம் எல்லாம் இருக்கே அங்கே.


ஆரூர் ரங்
மார் 21, 2025 11:33

மணப்பாறையில் பள்ளிச் சிறுவன் அறுவை சிகிச்சை செய்ததை அவனது டாக்டர் பெற்றோர் வீடியோ எடுத்து பெருமைப்பட்டது செய்தியாக வந்தது. தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம்தான்


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 02:39

ஹாஸ்பிடல் சார்ஜை கேட்டு, தனக்கு தானே செய்துகொள்ள முன்வந்திருப்பார். பாவம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை