உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக இன்று (நவ.,24) சூர்யகாந்த் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று (நவ.,24) பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

15 மாதங்கள்

கடந்த 2019ம் ஆண்டு மே 24ம் தேதி சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் நீதிபதி சூர்யகாந்த். தலைமை நீதிபதியாக இன்று தன் பணியை துவங்க உள்ள சூர்ய காந்த், 2027, பிப்., 9ம் தேதி வரை, 15 மாதங்கள் இப்பதவியில் இருப்பார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.

யார் இந்த சூர்யகாந்த்?

* நீதிபதி சூர்யகாந்த் தற்போது சுப்ரீம்கோர்ட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவர். இவர் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். தற்போது சூர்யகாந்துக்கு வயது 63.* ஹரியானாவில் பிறந்த சூர்யகாந்த் ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1984ம் ஆண்டு வக்கீலாக தனது நீதித்துறை வாழ்க்கையை தொடங்கினார்.* இவர் ஹரியானா மாநில அரசு சார்பில் வக்கீலாக பணியாற்றி இருக்கிறார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.* 2018ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இவர் 2019ம் ஆண்டு மே 24ம் தேதி சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.* நவம்பர் 24ம் தேதி இன்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியா சூர்யகாந்த் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajasekar Jayaraman
நவ 24, 2025 12:27

இவர் வந்து எந்த சாமி இடம் முறையிட சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Subramanian
நவ 24, 2025 12:08

வாழ்த்துகள்


Ram Thevar, Thampikkottai
நவ 24, 2025 11:58

இடதுசாரி, காங்கிரஸ் ஆதரவாளர்கள் புற்றீசல் போல் வந்து கொண்டே இருக்கிறார்கள் நீதிபதிகளாக, இது இந்திய நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் ஆபத்தானது...


Field Marshal
நவ 24, 2025 11:47

பழையன கழிதலும் புதியன புகுதலும் ..காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது ….


Shankar
நவ 24, 2025 11:11

வாழ்த்துக்கள். இவராவது மதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நேர்மையாக தீர்ப்புகள் வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை