சுவாமியே சரணம் ஐயப்பா-29: தினம் ஒரு தகவல்: 41 நாள் விரதம் ஏன்
41 நாள் விரதம் ஏன்முற்பிறவியில் செய்த பாவம், புண்ணியத்திற்கு ஏற்ப உயிர்கள் இன்பம், துன்பத்தை அனுபவிக்கின்றன. இந்த அனுபவத்தை வழங்கும் அதிகாரத்தை நட்சத்திரங்கள் 27, ராசிகள் 12, கிரகங்கள் 9 ஆகிய 48ம் (27 + 12+ 9) பெற்றுள்ளன. பரம்பொருளின் ஆணைப்படி உயிர்களை இவை இயக்குகின்றன. இதையே ஒரு மண்டலம் என குறிப்பிடுகின்றனர். ஆனால் ஐயப்ப பக்தர்கள் 41 நாள் விரதம் இருப்பதை மண்டல விரதம் என்பர். நட்சத்திரம், ராசியுடன் கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டை மட்டும் சேர்த்து ஒரு மண்டலம் 41 (27 + 12+ 2) என்கின்றனர். 41 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 5. இந்த உலகம் பஞ்ச பூதங்களால் இயங்குவதாலும், ஞானத்தை குறிக்கும் எண் 5 என்பதாலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாள் மட்டும் சபரிமலை சன்னதி திறக்கப்படுகிறது. சுயஒழுக்கம், கட்டுப்பாடு, பக்தி, ஞானம், தெய்வீகத்தை அடைய ஒரு மண்டல காலம் அதாவது 41 நாள் விரதமிருப்பது அவசியம்.-முற்றும்