உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தஹாவூர் ராணாவை 18 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

தஹாவூர் ராணாவை 18 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை சிறப்பு நீதிபதி முன் என்.ஐ,ஏ., போலீசார் ஆஜர்படுத்தினர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -- இ - தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த அவர்கள், மும்பையின் முக்கியப் பகுதிகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.தொடர்ந்து, 60 மணி நேரம் நடந்த தாக்குதல்களில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு, மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி, 2009ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் பிறந்து, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்ற தஹாவூர் ராணா, இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா, 2011ல் இருந்து, அங்குள்ள சிறையில் இருந்தார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் 'ரா' எனப்படும் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு அதிகாரிகள், அமெரிக்காவுக்கு சென்றனர்.நேற்று முன்தினம் ஒப்படைத்தது. தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன் அவர், டில்லிக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.அவரை டில்லியில் உள்ள திஹார் சிறையில், உயர் பாதுகாப்புள்ள வளாகத்தில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று இரவு என்.ஐ.ஏ., கோர்ட் சிறப்பு நீதிபதி முன் தஹாவூர் ராணாவை ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ.,போலீசார் 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி 18 நாள் அனுமதி அளித்தார். இதையடுத்து தஹாவூர் ராணாவிடம் என்.ஐ.ஏ.,போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.இந்த வழக்கில் என்.ஐ.ஏ., சார்பில் ஆஜராவதற்காக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramaswamy Jayaraman
ஏப் 11, 2025 11:42

இவர்களுக்காக அரசாங்கம் வெட்டி செலவு செய்கிறது. இந்த மாதிரி ஆட்களுக்காக கட்டி வைக்கப்பட்டுள்ள Gautamala சிறையில் அடைத்து அவர்களுக்குள்ளேயே சண்டை வந்து கொலை செய்வார்கள். இவனை அங்கேயே அனுப்பியிருக்க வேண்டும் இவனுக்காக செலவு செய்து ஏன் இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.


வெங்கி
ஏப் 11, 2025 11:02

அவருக்கு உடனே ஜாமீன் வழங்கி விடுவார்கள்.


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 09:47

பேடி மாதிரி பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருக்கும் டாவ்ஒட்டு இப்ராஈமை பிடித்து இந்திய அரசுக்கு கொடுப்பவர்களுக்கு என் சார்பாக அவர்களுக்கு மலர்மாலையும் பன்னீர் சோடா சர்பத்து கொடுத்து கவுரவிக்க படுவார்கள்.


Thetamilan
ஏப் 11, 2025 09:46

அனைத்திலும் தோல்வியடைந்த கொள்ளையடிப்பதில் மட்டுமே வெற்றிகண்ட கும்பல் அதை மறைக்க இப்போது நாடகமாடுகிறது


Yes your honor
ஏப் 11, 2025 11:18

ஓ இவரை தமிழக அரசா கைது செய்துள்ளது?


Thetamilan
ஏப் 11, 2025 09:45

இந்தியா கொண்டுவர ஏன் இவ்வளவு நாட்கள் ஆனது ?.


Ramesh Sargam
ஏப் 11, 2025 07:04

எல்லா விசாரணையும் முடிந்தபின் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கும். அதை நான் இப்பொழுதே கணித்துவிட்டேன். “வயது முதிர்வு காரணமாக இந்த நீதிமன்றம் ௹.10,000 அபராதம் விதித்து அவரை விடுவிக்கிறது” என்று ஒரு தீர்ப்பு வழங்கும் பாருங்க… வெறுத்து போயிடுவோம்…


Karthik
ஏப் 11, 2025 10:39

அதற்காகவே சில உயர்நீதிமன்ற/ உச்சநீதிமன்ற நிதிபதிகள் காத்திருப்பர் பிரபல மூத்த வாடகை வாய் வழக்காடியுடன் "வரவை" நோக்கி.. பணம் பாதாளம் வரை பாயும் போது, மேல்நோக்கி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை பாயாதா என்ன..?? இங்கு டில்லி நிதிமன்றத்தை நினைவு கூர்கிறேன்..


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 06:45

நாட்டுக்கு பங்கம் குடைச்சல் கொடுக்குற ஆளுக்கு அரேபிய நாட்டில் மாட்டு ஊசியில் மனநலம் பாதிக்க கூடிய திரவத்தை ஊற்றி ஏற்றி விடுவார்கள். அவர்கள் தெருத்தெருவாக வாழ்நாள் முழுவதும் யாரென்றே தெரியாத அளவுக்கு தண்டனைகள் இருக்கும், பசிக்கு மட்டுமே உணவு தெருஓரங்களில் மக்கள் கொடுப்பார்கள். என் தமிழ் உறவுகள் சொந்தங்கள் கண்ணாலே பார்த்திருக்கிறார்கள். மிக மிக கொடுமையாக இருக்கும். அதனால் வாலாட்டவே மூர்கன் பயப்படுவான். இந்தியாவில் ஏகப்பட்ட கோர்ட் கேஸ் என தப்பித்து விடுவார்கள் வீண் விரயம் தண்ட செலவு அரசுக்கு . தேவை இல்லாத ஆணி ..


Senthoora
ஏப் 11, 2025 06:33

இவனை, அமெரிக்க சிறையிலே வைத்திருந்திருக்கணும், அங்கே பிரியாணி, அது இது கிடையாது, இந்திய வந்தால் வீடு சாப்பாடு, பிரியாணி, ஏசி ரூம் கேட்பான், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கங்கே, குண்டுத்தாக்குதல், விமான கடத்தலில் ஈடுபட்டு இவனை பிணை கேட்பார்கள். அரசு விழிப்பாக


RAJ
ஏப் 11, 2025 06:16

எதுக்கு கோர்ட்டு.. வழக்கு.. ஏன் இவன் என்னபண்ணணு உங்களுக்கு தெரியாதா ????? எங்களுக்குள்ள இதெல்லாம் ஒரு timepass னு சொல்றமாதிரில இருக்கு..


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 06:09

சாம்பிராணி புகையுடன் கலந்த பரிசுத்த பன்னீர் திராக்ஷை ஆஸ்திரேலியா வாழ் தீய மூர்க்க சாஹேபுகளுக்கு அர்ப்பணிப்பு. அடுத்தது லிஸ்ட்ல நீங்க மாட்டாம இருங்க . உங்க திசபுத்தி குணத்தினாலேயே உங்க ஆளுங்க ஒவ்வொருத்தராக மாட்டுறாங்க.. படு ஜோர் ஓய் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை