உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேச்சு நடத்துக!

பேச்சு நடத்துக!

நம் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் நிலவும் மோதல் போக்கை தடுக்க, அங்கு வசிக்கும் மக்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கும் முன், இப்பிரச்னைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

தலைமை பண்பை நிரூபியுங்கள்!

பாலஸ்தீன பிரச்னையில், இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது, மனிதநேயத்தையும், அறநெறிகளையும் கைவிட்டுள்ளதை காட்டுகிறது. நம் அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்காமல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நட்புக்கு பிரதமர் மோடி மதிப்பளிக்கிறார். சோனியா மூத்த தலைவர், காங்கிரஸ்

துல்லிய தாக்குதல் நிச்சயம்!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. இதுபற்றி, ஏற்கனவே தேர்தல் கமிஷனில் முறையிட்டு உள்ளோம். காங்., - எம்.பி., ராகுல் வெளியிடும் 'ஹைட்ரஜன் பாம்' துல்லிய தாக்குதல் போன்றது. அது, எப்போது வெளியிடப்படும் என சொல்ல இயலாது. ஆதித்ய தாக்கரே மஹா., - எம்.எல்.ஏ., உத்தவ் சிவசேனா பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை