கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான வாசகர்கள், தங்கள் வாசிப்பு பசியை போக்குவதற்கு புத்தகங்களை வாங்கிக் குவித்தனர். பள்ளி மாணவர்களுக்கான, தமிழர் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஆசிரியைகளுக்கு 'தமிழோடு விளையாடு' எனும் தலைப்பில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் ஏ.சுந்தரமுருகேசன், ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., முதல் நிலைக்கல்லூரி தமிழ் ஆசிரியை சிவபிரியா, வேல்ஸ் உலகளாவிய பள்ளி தமிழ் ஆசிரியை ஆதித்யா புகழேந்தி, சேவாஸ்ரம் தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.ஆசிரியைகளுக்கு 'தமிழோடு விளையாடு' என்ற தலைப்பில் வினாடி வினா; கதை கூறுதல்; தாலாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஹொரமாவு வேல்ஸ் பன்னாட்டு பள்ளி, ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கோவிந்தம்மாள் பள்ளி, மர்பி டவுன் பி.பி.எம்.பி., பள்ளி, காக்ஸ் டவுனில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, ஜாலஹள்ளி குளூனி கான்வென்ட் பள்ளி சார்பாக 10 ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.அணிக்கு இருவர் வீதம் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டனர். பழமொழிகள், அறிஞர்களின் கூற்று, புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள், கண்டுபிடியுங்கள், தமிழகம், திருக்குறள் ஆகிய தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.சரியாக பதில் அளிக்கும் அணிக்கு, பத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் ஐந்து சுற்றுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும்,ஆசிரியைகள் சீறிப்பாய்ந்து பதில் அளித்தனர். சில கேள்விகளுக்கு பொதுமக்கள் பதில் கூறினர்.பரிசு மழைஆசிரியர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இது மிக சிறப்பு. நடுவர், மாணவர்களை ஊக்குவித்த நான், போட்டியாளராக பங்கேற்றது சிறப்பான அனுபவமாக இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும்போது, நம்மிடம் உள்ள திறமைகள் வெளிப்படுகிறது. வினாடி - வினா போட்டியில் முதல் பரிசு, தாலாட்டில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன். மிகவும் சந்தோஷம்.நந்தினி, தமிழ் ஆசிரியைஇரட்டிப்பு மகிழ்ச்சிவினாடி - வினா போட்டியில் மூன்றாம் பரிசு, கதை சொல்லுதல் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றேன். நேற்று என் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு வென்றனர். இன்று நானும் பரிசு வென்றுள்ளேன். இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். இனிமேல், தமிழ் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளையும் விடுவதாக இல்லை.ஆதித்யா,மேல்நிலைப்பள்ளி ஆசிரியைஏக்கம் நீங்கியதுமாணவர்களுக்கு போட்டிகள் நடத்தும்போது, ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுவதில்லையே என ஏங்கியதுண்டு. அந்த ஏக்கம், இன்று நீங்கியது. போட்டியில் பங்கேற்றதன் மூலமாக, இன்னும் நிறைய புத்தகங்கள் படிக்க ஆர்வம் வந்துள்ளது. குழந்தைகளுக்கு நிறைய கற்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்துள்ளது. படித்தவை எல்லாம் நினைவுக்கு வந்தது. அடுத்த ஆண்டு நடக்கும் போட்டிக்கு என்னை தயார் செய்ய உள்ளேன்.பரமேஸ்வரி வேலு,துவக்கப்பள்ளி ஆசிரியை--------------மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.வினாடி வினா:1: சிவகனி - ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கோவிந்தம்மாள் பள்ளி; நந்தினி - வேல்ஸ் பன்னாட்டுப் பள்ளி2: சரண்யா - குளூனி கான்வென்ட்; டெய்சி ராணி - பி.பி.எம்.பி., பள்ளி3: பரமேஸ்வரி, ஆர்த்தியா, வேல்ஸ் பன்னாட்டுப் பள்ளிகதை கூறல்:1: சிவகனி - ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கோவிந்தம்மாள் பள்ளி2: சுமதி - ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பெண்கள் உயர்நிலைப்பள்ளி3: ஆதித்யா - வேல்ஸ் பன்னாட்டுப் பள்ளிதாலாட்டு:1: இசபெல்லா - காக்ஸ் டவுன் அரசு உயர்நிலைப்பள்ளி2: நந்தினி - வேல்ஸ் பன்னாட்டுப் பள்ளி3: டெய்சி ராணி - மர்பி டவுன் மாநகராட்சி பள்ளி.............*தனித்திறமைகள் வளர்க்க அறிவுரை வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தரமுருகேசன் வாழ்த்தி பேசியதாவது:பெங்களூரில் நான் முதன் முதலில் கால் வைத்த அன்று, நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அப்போது, என் நிலைமை எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். கர்நாடகாவில் மொத்தம் 18 வாசன் கண் மருத்துவமனைகள் உள்ளன.ஒரு தகுதியான மருத்துவர், டெக்னிஷியன்கள், செவிலியர்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது. அரசு மருத்துவ கல்லுாரியில் படித்து முடித்து வேலைக்கு வரும் மாணவர்கள், புதிய டெக்னாலஜிகளை உபயோகிப்பதில் தடுமாறுகின்றனர். அவர்களை வேலைக்கு எடுத்த பின்னர், மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டுள்ளது.அனைவரும் நன்றாக படித்தால் மட்டும் போதாது; தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்தவர்களாக வர வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.பெரும்பாலான மாணவர்களுக்கு சினிமா நடிகர்களை பிடிக்கும். அவர்கள் வேலையை ஒழுங்காக செய்வதால், பிடிக்கிறது. அதுபோல நீங்களும் உங்கள் வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார் - நமது நிருபர் -.