உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தார்வாட் கலெக்டராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

தார்வாட் கலெக்டராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுவுக்கு, புதிய பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தார்வாட் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் திவ்யா பிரபு. இவர் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். இவரது சொந்த ஊர் மதுரை. சிறந்த தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தியற்காக, இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து வாங்கி இருந்தார்.இந்நிலையில், திவ்யா பிரபுவின் சிறப்பான பணியை பார்த்து, அவருக்கு கர்நாடகா அரசு, புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. தார்வாட் மாவட்ட கலெக்டராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். திவ்யா பிரபுவின் கணவர் ராம்பிரசாத் மனோகர். இவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.கர்நாடகா அரசின் சுற்றுலா துறை இயக்குனராகவும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராகவும் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ