மேலும் செய்திகள்
வானில் ஒரு அதிசய நிகழ்வு: இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
2 hour(s) ago | 1
பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற கொடூரப் பெண் கைது
2 hour(s) ago
ரஷ்ய அதிபர் புடினின் இந்திய பயணம்: 10 முக்கிய விஷயங்கள் இதோ!
4 hour(s) ago | 6
புதுடில்லி: பார்வை இழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரான லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வழங்கினார்.கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த துவாரகேஷ் 36,கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தின் சார்பாக நடந்த கூடைபந்து போட்டியில் பங்கேற்றபோது அவருடைய கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8 மாத காலம் சிகிச்சையில் இருந்தார். இறுதியில் துரதிருஷ்டவசமாக கண் பார்வை இழந்தார். கண்பார்வையை இழந்த பிறகு, லெப்.கர்னல் துவாரகேஷ் மொத்த பார்வையிழப்புடன் இந்திய ஆயுதப் படையில் தொடர்ந்து பணியில் இருக்கும் முதல் அதிகாரியாக வரலாறு படைத்தார்.மேலும், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் நீச்சல் ஆகிய இரண்டிலும் பல தேசியப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது நிர்வாகக் கடமைகளைச் செய்ய ஏஐ மற்றும் உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிலும் இணை விளையாட்டுப் போட்டிகளிலும் (பாராவிளையாட்டு) சிறந்து விளங்குகிறார்.டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தனது அசாதாரணமான சேவை, விடாமுயற்சி, தலைமைத்துவத்திற்காக, லெப். கர்னல் துவாரகேஷ்--க்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரப்படுத்தினார்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago
4 hour(s) ago | 6