உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி நகரத்தார் விடுதியில் தமிழக சாப்பாடு

அயோத்தி நகரத்தார் விடுதியில் தமிழக சாப்பாடு

இப்போது எல்லா பாதைகளும் அயோத்தியை நோக்கித்தான்; எல்லாரது பார்வையும் ராமர் கோவில் மீதுதான்.அதற்கு காரணம், இங்கு கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழா காணவுள்ள பிரமாண்டமான ராமர் கோவில் .தமிழகத்தில் உள்ளவர்கள் பலருக்கும் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தின் போதோ அல்லது அதன்பிறகோ ராமர் கோவிலைப் போய் பார்க்கவேண்டும் என்ற தணியாத ஆவல் ஏற்பட்டுள்ளது.

போக விரும்புபவர்களுக்கு மொழிப்பிரச்னையை தாண்டி தங்குமிடமும், சாப்பாடு பிரச்னை யும் தான் முன் நிற்கின்றன. காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட நகரத்தார்கள் பல்வேறு புண்ணிய தலங்களுக்கு போகும் வழக்கமுடையவர்கள். அப்படிப் போகும் போது அங்கே தங்குவதற்கும், உணவிற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே விடுதி ஒன்றைக்கட்டி நன்கு பராமரித்து வருகின்றனர்.காசியில் உள்ள நகரத்தார் விடுதி மிகவும் பிரபலம். அதே போல கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியிலும் நகரத்தார் விடுதி உள்ளது.அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதி 1890 (கிட்டத்தட்ட 133 ஆண்டுகள்)ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன் முழுவிலாசம் மற்றும் போன் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதே போலத்தான் விடுதி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இரண்டு பெரிய ஹால்களும், ஒரு அடுக்களையும், மூன்று குளியலறையும், கழிப்பறைகளும் உள்ளன. வரக்கடிய யாத்ரீகர்களுக்கு பாயும், தலையணையும் கொடுக்கப்படும். மூன்று வேளையும் இட்லி, பொங்கல், சாப்பாடு என்று தமிழக உணவு அதிலும் குறிப்பாக செட்டிநாடு சைவ உணவு வழங்கப்படுகிறது.ஒரே நேரத்தில் 120 பேர் வரை விடுதியில் தங்கலாம். லாப நோக்கமில்லாமல் சேவை நோக்கத்துடன் செயல்படும் இந்த நகரத்தார் விடுதியில் தங்குவதற்கும், உணவிற்கும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. விடுதியில் சிறிய ராமர் சன்னிதியும் உள்ளது.விடுதிக்கு சொந்தமாக கடைகள் உள்ளன. விடுதிக்கு சராசரியாக தினமும், 50 பேர் வரை வந்து செல்கின்றனர். ஆனால், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பின் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப விடுதியை மேம்படுத்தவும், விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.வரக்கூடியவர்கள் தங்களது வருகை விபரத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டுச் செல்லவேண்டும்.Ayodhya Nattukot Nagara Chatram,Nattukot Sri Ram Mandir, Baboo Bazaar, Ayodhya- 224123, U.P. - India. : 7311166233, 7373070733


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sokkalingam
ஜன 24, 2024 16:42

அருமை இந்த சேவை தொடரட்டும் .இது முற்றிலும் உண்மை


Krishnamurthy Venkatesan
ஜன 24, 2024 13:44

வாழ்த்தி வணங்குகிறேன்


g.s,rajan
ஜன 22, 2024 21:51

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ,செட்டிநாடு உணவுக்குப் பெயர்போனது மற்றும் விருந்தோம்பலுக்கும் பெயர் போனது ,நகரத்தாரின் சீரிய பணி பாராட்டுக்கு உரியது. .


Anonymous
ஜன 22, 2024 10:25

நகரத்தார் சமூகத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன், வாழ்க அவர்கள் சேவை, வளர்க அவர்கள் மக்கட் தொண்டு.இறைவன் உங்கள் சேவைக்கு என்றென்றும் துணை இருந்து அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.


Muralidharan raghavan
ஜன 25, 2024 11:44

அவர்கள் உண்மையாகவே தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். இங்கே சில திராவிட கட்சிகள் எதோ அவர்களால்தான் தமிழ் வளர்ந்தது என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்


PR Makudeswaran
ஜன 22, 2024 10:16

முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலன்.


Ramesh Sargam
ஜன 22, 2024 09:05

அருமை. உங்கள் இந்த சேவை தொடரவேண்டும். மேலும் மேலும் வளரவேண்டும்.


N Annamalai
ஜன 22, 2024 08:06

அருமை .உங்கள் சேவை தொடரட்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை