உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

புதுடில்லி,: சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை 2023ல் தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கவர்னர் ரவி அறிவுறுத்தல் கொடுத்திருந்தார்.இது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு தாக்கல்செய்திருந்தது.இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை.இந்நிலையில், இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும், வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலை மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும்போது, இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

C.SRIRAM
ஜன 17, 2025 10:33

உளறுவதே பிழைப்பாகிவிட்டது


Velan Iyengaar
ஜன 17, 2025 09:52

எவ்ளோ முறை உச்சநீதிமன்றத்தில் அசிங்கப்படும் இந்த ஜென்மம்? மானம் மரியாதையை கெவுனர் ஆகும்போதே அடகு வைத்துவிட்டதா ..சூடு சொரணை காணாமல் போய்விட்டதா ?? எதுக்கு ஐபிஎஸ் எல்லாம் படித்துவிட்டு இவ்ளோ மானக்கேடா தரக்குறைவா நடந்து கொள்ளவேண்டும் ??


subramanian
ஜன 17, 2025 22:26

நீங்கதான் அசிங்கப்பட்டு போய் இருக்கிறாய். பொய் பெயரில் கள்ள தனம் செய்யும் தில்லுமுல்லு வேலன் ஐயங்கார்.


அப்பாவி
ஜன 17, 2025 09:03

இதுக்குதான் பதவிக் காலம் முடிஞ்ச கெவுனருக்கு மாற்றாக புது கெவுனரைப் போட்டிருக்கணும்.


Sundar R
ஜன 17, 2025 08:48

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவி தான்.


தமிழ்வேள்
ஜன 17, 2025 08:30

மாநில அமைச்சரவை எனபததே கவர்னருக்கு உதவ வேண்டிய அமைப்பு தான்.. தன்னிச்சையாக செயல்படுவது இயலாது..அப்புறம் என்ன கேடுகாலம் இந்த திராவிஷ கும்பலுக்கு? ஞானசேகரன் சிக்க பெத்தவரு, சார்... ஆகியோருக்கு எல்லாம் துணைவேந்தர் பதவி கிடைக்காது... அதெல்லாம் நாலு எழுத்து படிச்சவங்களுக்கு மட்டுமே.தற்குறி கள்ள சாராயம் கள்ள உறவு திராவிட வகையறாக்களுக்கு அல்ல


GMM
ஜன 17, 2025 08:20

புதிய தகவலை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தேசிய உச்ச நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவது போல் உள்ளது தமிழக நிர்வாக இடையீடு மனு. துணை வேந்தர் நியமிப்பதற்கு 2023 ல் தமிழக நிர்வாக மாநிலம் அமைத்த தேடுதல் குழுவை தேசிய பல்கலை மானிய குழு அனுமதிக்க வேண்டும். தன்னிச்சையாக அமைக்க பல்கலைகழகங்கள் மாநகராட்சி பள்ளி கிடையாது. எப்படி வக்கீல்கள் கவர்னர் போன்ற அரசியல் சாசன பதவிக்கு எதிராக மனு தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை.


Svs Yaadum oore
ஜன 17, 2025 07:27

இந்த விடியல் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போய் போடட்டும் ...இங்குள்ள பள்ளி பாட நூல் கழக தலைவன் போல துணை வேந்தர் பதவிக்கு மதம் மாற்றிகளை மட்டும் நியமனம் செய்ய முடியாது


Kasimani Baskaran
ஜன 17, 2025 06:52

வாய்ப்பு கிடைக்கு பொழுதெல்லாம் கவர்னரை அவமதிக்க விடியல் அரசு தயங்கியதே கிடையாது. அதே போலத்தான் இந்த தேடுதல் குழு அமைப்பதிலும்.


ramani
ஜன 17, 2025 06:42

தேவையில்லாமல் ஆளுநரை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறது தமிழக அரசு. இது தவறானது. அரசு தனது செயலை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆளுநர் ஏன் அரசு மீது நடவடிக்கை எடுக்க முற்படவில்லை என்று தெரியவில்லை


Dharmavaan
ஜன 17, 2025 06:31

ஆளுநர் சொல்வதை செய்தால் கொள்ளை அடிக்க முடியாது கோடிகளில்.. திருட்டு திமுக கொள்கைகளை ,பிரிவினைவாதத்தை பரப்ப முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை