உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகம் அனுபவிக்கிறது!

தமிழகம் அனுபவிக்கிறது!

கடலில், இலங்கை எல்லையில் உள்ள சில பகுதிகளுக்குள் சென்று நம் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என, ஒப்பந்தம் இருந்தது. ஆனால், எமர்ஜென்சி காலத்தில், அந்த ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டன. இதனால், நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான விளைவுகளை தமிழகம் இன்னும் அனுபவித்து வருகிறது.ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

துாதரக உறவு மோசம்!

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், எமர்ஜென்சி காலத்தில் நடந்ததை பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நம் நாட்டின் துாதரக உறவு கடந்த இரு வாரங்களில் மோசமாக உள்ளது. எமர்ஜென்சியை விட்டுவிட்டு, துாதரக உறவை சரி செய்வதில் அமைச்சர் ஜெய்சங்கர் கவனம் செலுத்த வேண்டும். கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை

கல்வித்தரம் மேம்படும்!

பீஹாரில் வறுமை, வேலையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி கல்வி தான். 30 ஆண்டுகளுக்கும் மேல் மாறி மாறி ஆட்சி செய்த லாலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர், பீஹாரை தொழிலாளர்களின் மாநிலமாக மாற்றிவிட்டனர். இனி அது தொடராது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்; வேலைவாய்ப்பு பெருகும்.பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூன் 28, 2025 16:49

என்ன செய்வது? அவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நேருவையும் இந்திரா காந்தியையும் குறை சொல்லியே பழகி விட்டது, திடீரென மாற்றிக் கொள்ளச் சொன்னால் அவர்களால் எப்படி முடியும்?


Umapathy AP
ஜூன் 28, 2025 09:56

தமிழகத்துக்கு மட்டும்தான் கதைசொல்கிறார்கள் எல்லா அமைச்சர்களும், அதைவிடுத்து ஆக்கபூர்வமாக சாதித்ததை சொல்லுங்கள் , வெளியுறவுத்துறை நன்றாக செயல்படுகிறது என்பது பலருக்கு தெரிந்ததே மற்றவர்களை போல தேவையில்லாததைபேசி ஜெய்சங்கர் அவர்கள் தனது பெருமையை குறைத்துகொள்ளகூடாது


புதிய வீடியோ