வாசகர்கள் கருத்துகள் ( 1 )
During today GST meeting , ministerial council has agreed to reduce GST on health and life insurance but how much will be reduction shall be finalised during next meeting .
புதுடில்லி: காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை குறைப்பது தொடர்பான முடிவை ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கட்காி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளை கொண்ட பிட்மென்ட் குழு, மத்திய நிதியமைச்சகத்திற்கு சில பரிந்துரைகளை வழங்கி இருந்தது. இது குறித்து இன்று( செப்.,09) நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 54வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத வரியை குறைப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் எவ்வளவு மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று டில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
During today GST meeting , ministerial council has agreed to reduce GST on health and life insurance but how much will be reduction shall be finalised during next meeting .