உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்களுக்கு ரூ.81,735 கோடி வரிப்பகிர்வு

மாநிலங்களுக்கு ரூ.81,735 கோடி வரிப்பகிர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாநிலங்களுக்கு கூடுதல் வரிப்பகிர்வாக 81,735 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வரி வருவாயில் மாநிலங்களுக்கான கூடுதல் வரிப் பகிர்வுத் தொகை 81,735 கோடி ரூபாய், ஜூன் 2ல் விடுவிக்கப்படும்.இதையும் சேர்த்து மாநிலங்கள் பெறும் வரிப்பகிர்வு தொகை, கடந்த ஆண்டைக் காட்டிலும், 11,860 கோடி ரூபாய் அதிகமாகும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையிலும், 'வளர்ந்த இந்தியா 2047' என்ற நோக்கிலும் கூடுதல் வரிப்பகிர்வுத் தொகை மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது. மூலதன செலவினம், வளர்ச்சி மற்றும் சமூகநல திட்டங்கள், முன்னுரிமை திட்டங்களுக்கு மாநிலங்கள் செலவிட, இந்த கூடுதல் தொகை பயன்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 31, 2025 09:51

அதில் பாதிக்குப் பாதி உ.பி க்கு கொட்டிக் கொடுக்கப்படும். அங்கேதான் வளர்ச்சியோ வளர்ச்சி.


vivek
மே 31, 2025 11:20

மிச்சத்தை நீ டாஸ்மாக் போய் குடுத்திடு


GMM
மே 31, 2025 08:03

மாநில வரி பகிர்வை ஒழுங்கு படுத்த வேண்டும். அந்நிய கடன் மத்திய அரசுக்கு GDP யில் 50 சதவீதம் மேல் இருந்தால் பகிர்வு கொள்கை மாற்ற வேண்டும். மாநிலத்தில் கடன் GDP யில் 25 சதம் இருந்தால் திரும்ப வசூலிக்க முடியாத சலுகைகள் நிறுத்த வேண்டும். ஓய்வு ஊழியர்கள் நிதி சட்டம் 2025 கீழ் பஞ்சபடி போன்ற சலுகை நிறுத்தம்? கடன் ஒரு பெரிய அணு ஆயுதம்? நாட்டை தாக்கும்.


முக்கிய வீடியோ