தெலுங்கானா அமைச்சரவை விரிவாக்கம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023 டிசம்பரில் காங்., அரசு அமைந்த பின், நேற்று முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.தலைநகர் ஹைதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் விவேக் வெங்கட சுவாமி, அட்லுாரி லட்சுமண குமார், வகிதி ஸ்ரீஹரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.அவர்களுக்கு, கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.தெலுங்கானா அமைச்சரவையின் முழு பலம் 18. தற்போது மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றதை அடுத்து, 15 ஆக அதிகரித்துள்ளது.