உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு: ஏ.எஸ்.பி., உயிரிழப்பு; தீவிர விசாரணை!

சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு: ஏ.எஸ்.பி., உயிரிழப்பு; தீவிர விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். இந்த குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f4gqmego&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்டா- எரபோரா சாலையில் டோண்ட்ரா அருகே நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சுக்மா மாவட்டத்தின் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மேலும் குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியதாவது:கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்து, தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அவர் ஒரு துணிச்சலானவர். அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம். பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venugopal, S
ஜூன் 09, 2025 19:14

வெளிநாட்டு தீவிரவாதிகளை விட உள்ளூர் பயங்கரவாதிகள் வேரடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்


Subramanian
ஜூன் 09, 2025 16:03

ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


பழங்குடி
ஜூன் 09, 2025 15:13

அங்கே என்ன பிரச்சனைன்னு தெரியாம போராடிக் கிட்டிருக்காங்க.


N.Purushothaman
ஜூன் 09, 2025 13:09

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ....


Ramesh Sargam
ஜூன் 09, 2025 12:39

நாட்டில் உள்ள நக்சலைட்டுகள் மீதும் Operation Sindoor போன்று ஒரு கடினமான தாக்குதல் நடத்தி அவர்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.


HoneyBee
ஜூன் 09, 2025 16:00

மிகவும் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை