உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒடுக்கத் தவறிய பாகிஸ்தானுடனான தொடர்பை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இத்தாலி பிரதமர் மெலோனி உள்பட ஜப்பான், யூ.ஏ.இ., ஈரான், இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் லாமி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவில், 'பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமியுடன் தொலைபேசியில் பேசினேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 29, 2025 01:40

நீங்கள் எத்தனை நாள் சகித்து கொண்டு இருப்பது தான் சகிகல!


Apposthalan samlin
ஏப் 28, 2025 10:35

தாக்குதல் நடந்து எத்தனை நாள் ஆகி உள்ளது இன்னும் பேசிக்கிட்டே தான் இருக்காங்க சட்டு புட்டுன்னு 300 தீவிரவாதிகளை கொன்னு விட்டு பேசணும் வீணா போன பிஜேபி அரசு .


அசோக்
ஏப் 28, 2025 08:52

வாயாலேயே பேசிக்கொண்டிருங்கள்..இந்நேரம் இஸ்ரேலாக இருந்தால் பாகிஸ்தானுக்கு சங்கு ஊதிருப்பார்கள். நாம் இன்னமும் வாயாலயே பேசி கொண்டிருகிறோம்..


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 09:20

இஸ்ரேலில் நகர நக்சல் ஊடகங்கள் கிடையாது.


Rasheel
ஏப் 28, 2025 11:23

தாக்குதல் என்பது வாள் சண்டையல்ல. இது பழைய கால போரும் அல்ல. எதிரி தூங்கும் போது அடிப்பது. தீவிரவாதிகள் இப்போது தங்கள் இடத்தில இருந்து தப்பித்து போய் விட்டனர். பாக்கிஸ்தான் ராணுவமும் எச்சரிக்கையாக உள்ளது. எனவே பாரதம் அவர்கள் நினைக்காத போது பேரிடியாக இடிக்கும். அது அவர்களுக்கு பேரிடியாக இருக்கும். மிக பெரிய இழப்பை ஏற்படுத்தும்.


பிரேம்ஜி
ஏப் 28, 2025 08:38

மக்களாகிய நாங்களும் அதையேதான் சொல்லுகிறோம். சகித்துக் கொள்ள வேண்டாம். அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. பேசாமல் நடவடிக்கை எடுக்கலாமே!


Kalyanaraman
ஏப் 28, 2025 07:56

ஓட்டுக்காக பிரிட்டிஷ் காரனும் குருமா மாதிரி புரோக்கர் வேலய செய்யறான். பாருங்க அடுத்தது கனடா புரோக்கர்....


முக்கிய வீடியோ